நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணக் காணொளியை முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று ஒளிபரப்ப உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இருவரும் திருமணத்துக்கு சல்லிக்காசுகூட செலவிடவில்லை என்றும் அனைத்து செலவுகளையும் அந்த முன்னணி நிறுவனமே ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
திருமண விருந்தில் பங்கேற்றவர்களுக்கு, தலா 3,500 ரூபாய் மதிப்பில் உணவு, பாதுகாப்பு ஏற்பாடுகள், பிரபல தங்குவிடுதியில் உள்ள அனைத்து அறைகளும் முன்பதிவு செய்வது என பணத்தை தண்ணீராய் செலவிட்டதாம் அந்த நிறுவனம்.
எனினும், திருமணக் காணொளியை ஒளிபரப்பும் உரிமையை அளிக்க நயன்தாரா தரப்பு பெருந்தொகையைக் கேட்டதால் அந்நிறுவனம் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, இந்தக் காணொளி ஒளிபரப்பு உரிமை ரூ.25 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியானது.

