விஜய் சேதுபதி: காலத்தால் அழியாத படம் ‘மாமனிதன்’

"நான் நடித்­துள்ள 'மாம­னி­தன்' திரைப்­ப­டம் காலத்­தால் அழி­யாது, காலங்­கள் கடந்து நிற்­கும்," என்­கி­றார் விஜய் சேது­பதி.

இது தமக்­குப் பிடித்­த­மான படங்­களில் ஒன்று என்­றும் அவர் கூறி­ உள்­ளார்.

விஜய்­ சே­து­பதி, காயத்ரி, குரு­சோ­ம­சுந்­த­ரம் நடித்துள்ள 'மாம­னி­தன்' படம் கடந்த மாதம் 14ஆம் தேதி திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­னது. சீனு ராம­சாமி இயக்­கிய இந்த படத்தை யுவன் சங்­கர் ராஜா தயாரித்துள்ளார். இளை­ய­ரா­ஜா­வும் யுவன் சங்­கர் ராஜா­வும் இணைந்து இசை­ய­மைத்­த­னர்.

கல­வை­யான விமர்­ச­னங்­க­ளைப் பெற்­ற­போ­தி­லும் இந்­தப் படம் வசூ­லில் குறை வைக்­க­வில்லை என்­கி­றார்­கள். இந்­நி­லை­யில் 'ஓடிடி' தளத்­தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது 'மாம­னி­தன்'.

இது தொடர்­பான நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு பேசிய விஜய் சேது­பதி, இந்­தப்­ப­டத்தை திரை­அரங்­கில் பார்க்­கத் தவ­றி­ய­வர்­கள், எல்­லா­வற்­றை­யும் ஒதுக்கி வைத்து­விட்டு ஓடிடி தளத்­தில் படத்­தைப் பார்க்கவேண்­டும் என வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

"இந்­தப்­ப­டத்­தைப் பார்ப்­ப­வர்­களுக்கு கதா­நா­ய­கன் ராதா­கி­ருஷ்­ணன் நெருக்­க­மா­ன­வ­னாகி விடு­வான். 'மாம­னி­தன்' படம் தொடர்­பாக என்­னி­ட­மும் முன்பு நிறைய கேள்­வி­கள் கேட்­கப்­பட்­டன. ஆனால் எதற்­கும் நான் பதில் சொல்­ல­வில்லை.

"ஒரு கதா­பாத்­தி­ரம் ரசி­கர்­களின் எதிர்­பார்ப்­புக்கு ஏற்ப திரை­யில் நட­மாட இய­லாது. அவ்­வாறு நடக்கவேண்­டிய அவ­சி­ய­மும் இல்லை.

"சீனு ராம­சாமி போல் ஒரு படம் எடுக்க இங்கு யாரும் இல்லை. பின்­ன­ணிக் குரல் பதி­வின்­போது முழுப் படத்­தை­யும் பார்த்­தேன். ஒவ்­வொரு காட்­சி­யும் அத்­தனை உயிர்ப்­பு­டன் இருந்­தது. எனக்கு மிக­வும் பிடித்த படங்­களில் இது­வும் ஒன்று. இது­போன்ற படங்­களை ஆத­ரிக்க ரசி­கர்­கள் தயா­ராக உள்­ள­னர். ரசி­கர்­களை நாம் ஏமாற்றி­வி­டக் கூடாது," என்­றார் விஜய் சேது­பதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!