துணிச்சலை விதைக்கும் திரைப்படம் 'கார்கி'

துணிச்சலை விதைக்கும் திரைப்படம் 'கார்கி'

2 mins read
ba03138e-2f21-4509-aa93-254d8f6cd0d2
'கார்கி' படத்தில் சாய் பல்லவி. -

'கார்கி' படம் குறித்து பல்­வேறு தரப்­பி­ன­ரும் பேசு­கி­றார்­கள். படத்­துக்கு விமர்­சன, வசூல் ரீதி­யில் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

"ஒரு திரைப்­ப­டத்தை உரு­வாக்­கும்­போதே அதன் வெற்­றியை உணரமுடி­யும் என்று சொல்வதுண்டு. அது­போன்ற உணர்வை எங்­களில் பலர் உணர்ந்­தோம்," என்­கி­றார் படத்­தின் இயக்­கு­நர் கௌதம் ராமச்­சந்­தி்­ரன்.

நடுத்­தர வர்­க்கத்­தைச் சேர்ந்த ஓர் ஆசி­ரியை அமை­தி­யாக வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார். திடீ­ரென அவ­ரது தந்­தைக்கு ஒரு பிரச்­சினை ஏற்­ப­டு­கிறது. அத­னால் ஆசி­ரி­யையும் பாதிக்கப்படுகிறார். இதை­ய­டுத்து நடக்­கும் போராட்­டத்­தில் கார்கி என்ற அந்­தப் பெண் வெற்றி பெறு­கி­றாளா என்­ப­து­தான் இப்­ப­டத்­தின் கதை.

ஒவ்­வொரு பெண்­ணுக்­குள்­ளும் குறிப்­பாக ஒவ்­வொரு மக­ளுக்­குள்­ளும் இந்­தப் படம் துணிச்­சலை விதைக்­கும் அல்­லது தட்­டி­யெ­ழுப்­பும் என்­கி­றார் இயக்­கு­நர்.

கௌதம் ராமச்­சந்­தி­ரன் இயக்­கத்­தில், கோவிந்த் வசந்தா இசை­யமைத்­துள்ள இந்­தப் படம் தமிழ், கன்­ன­டம், தெலுங்கு ஆகிய மொழி­களில் தயாராகி உள்­ளது. ரவிச்­சந்­தி­ரன், ஐஸ்­வர்யா லட்­சுமி, தாமஸ் ஜார்ஜ் ஆகி­யோர் தயா­ரித்­துள்ள இப்­ப­டத்தை சூர்யா, ஜோதி­கா­வின் 2டி நிறு­வ­னம் வெளி­யி­டு­கிறது.

"இயக்­கு­நர் கௌதம் ராமச்­சந்­தி­ரன் கதை சொல்­லும்­போதே அவ்­வ­ளவு சுவா­ர­சி­யமாக இருந்­தது. எனக்கு இதில் திறமையை வெளிப்படுத்த நிறைய வாய்ப்பு இருப்­ப­தைப் புரியவைத்­தார்.

"வழக்­க­றி­ஞ­ராக காளி வெங்­கட் நடித்­துள்­ளார். கிட்­டத்­தட்ட அவர்­தான் இந்­தப் படத்­தின் நாய­கன் என­லாம். அவ்­வ­ளவு அரு­மை­யாக நடித்­துள்­ளார். என் தோழி­யாக நடித்­தி­ருப்­ப­து­டன், தயா­ரிப்­பா­ள­ரா­க­வும் ஐஸ்­வர்யா லட்­சுமி ஆத­ரவு அளித்­துள்­ளார்.

"நல்ல நடிகை எனப் பெய­ரெடுக்க விரும்­பு­கி­றேன். அத­னால்­தான் இப்­ப­டி­யொரு கதைக்­க­ளம், கதா­பாத்­தி­ரத்தை தேர்வு செய்­துள்­ளேன்," என்­கி­றார் சாய் பல்­லவி.

சில படங்­க­ளின் விளம்­பர நிகழ்வு­களில் இவர் பங்­கேற்­ற­தில்லை. ஆனால் 'கார்கி' படத்தை விளம்­ப­ரப்­ப­டுத்த கிடைத்த சிறு வாய்ப்­பை­யும்­ இவர் இழக்­க­வில்லை.

"கார­ணம், நான் நடித்த சில படங்­க­ளுக்­கான விளம்­பர நிகழ்ச்சி­களில் நான் இல்­லை­யென்­றா­லும், அவை தன்­னால் நடந்­தே­றும். சம்­பந்­தப்­பட்ட படங்­க­ளின் நாய­கன் என்­னை­விட பளிச்­சென்று காணப்­படு­வார். ஆனால், 'கார்கி'யைப் பற்றி பேசவேண்­டிய அல்­லது படத்தை மக்­களிடம் கொண்டு போய் சேர்க்­கக் கூடிய ஒரே ஆள் நான்­தான். எனவே நேர­டி­யா­கக் கள­மி­றங்கி வேலை செய்­தாக வேண்­டும். இதில் வண்­ண­ம­ய­மான பாடல்­களோ, அடி­தடி சண்­டைக் காட்­சி­களோ இல்லை. நல்ல கதை. அத­னால்­தான் நானே களமிறங்கி னேன்," என்கிறார் சாய் பல்லவி.