விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் அவரது ஜோடியாக நடிக்க உள்ளார் ராஷ்மிகா மந்தனா.
விக்ரமின் 61வது படத்தை பா.ரஞ்சித் இயக்க உள்ளார். இது 19ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த சில சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் படமாகும்.
இந்நிலையில் ராஷ்மிகாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ரஞ்சித் விவரித்த கதையைக் கேட்ட அடுத்த நிமிடமே இந்தப் படத்தில் நடிக்க தாம் தயார் என்று கூறியுள்ளார் ராஷ்மிகா.
அது மட்டுமல்ல, ரஞ்சித் கேட்டுக்கொண்டதால் தொடர்ந்து ஐம்பது நாள்கள் படப்பிடிப்பில் பங்கேற்கவும் அவர் ஒப்புக் கொண்டதாகத் தகவல்.
விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது. 'சுல்தான்' படத்தில் கார்த்தியின் ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா, இப்போது விஜய்யுடன் 'வாரிசு' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

