இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் 'லெஜண்ட்' சரவணன் நடித்துள்ள படம் 'தி லெஜண்ட்'. வரும் 28ஆம் தேதி திரைகாண உள்ள நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடலை வெளியிட்டுள்ளனர்.
பெரும் பொருள்செலவில் உருவாகி உள்ளது 'தி லெஜண்ட்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஊர்வசி ரௌடாலா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
அண்மையில் வெளியான இப்படத்தின் முன்னோட்ட காட்சித் தொகுப்பும் ஒரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'போ..போ..' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கே.கே பிரசாத்தும் ஜோனிதா காந்தியும் இணைந்து பாடியுள்ள இந்தப் பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.