இரண்டு பாகங்களாக வெளியாகிறது 'விடுதலை'

இரண்டு பாகங்களாக வெளியாகிறது 'விடுதலை'

1 mins read
dffd9b83-ce17-4140-ba5c-9edb1d4ad937
'விடுதலை' படத்தின் படப்பிடிப்பில் சூரி, இயக்குநர் வெற்றிமாறன், விஜய் சேதுபதி. -

'அசு­ரன்' படத்­தின் வெற்­றிக்­குப் பிறகு வெற்­றி­மா­றன் இயக்­கத்­தில் எந்­தப் படம் முத­லில் வெளி­வ­ரும் என்ற குழப்­பம் ரசி­கர்­கள் மத்­தி­யில் நிலவி வரு­கிறது.

இந்­நி­லை­யில் சூரியை வைத்து அவர் இயக்கி வரும் 'விடு­தலை' படம்­தான் முத­லில் வெளி­யா­கும் என்று அவ­ரது தரப்­பில் கூறப்­ப­டு­கிறது. அது­மட்­டு­மல்ல, இது இரண்டு பாகங்­க­ளாக வெளி­வ­ரும் என்­றும் சொல்­கி­றார்­கள்.

ஜெய­மோ­க­னின் 'துணை­வன்' சிறு­க­தையை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு 'விடு­தலை'க்கான கதை, திரைக்­க­தையை அமைத்­துள்­ளா­ர் வெற்றி மாறன். மார்க்­சிய - லெனி­னிய இயக்­கத்­தைச் சேர்ந்த ஒரு­வரை சுட்­டுக்­கொல்ல (என்­க­வுன்ட்­டர்) முடிவு செய்து, இரு காவ­லர்­கள் அழைத்­துச்­செல்­கி­றார்­கள். அப்­போது அவர்­க­ளுக்­கு இடையே நடை­பெ­றும் உரை­யா­டலே 'துணை­வன்' சிறு­க­தை­யா­கும்.

இதற்கு வெற்­றி­மா­றன் எழு­தி­யுள்ள திரைக்­கதை மிகப் பர­ப­ரப்­பாக இருக்­கும் என்று படக்­கு­ழு­வி­னர் கூறு­கின்­ற­னர். இந்­தப் படத்­தின் நாய­கன் சூரி என்­றா­லும், அவ­ருக்கு இணை­யான கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார் விஜய் சேது­பதி. மேலும், பிர­காஷ்­ராஜ், கௌதம் மேனன், விஜய் சேது­ப­தி­யின் மகன் சூர்யா உட்­ப­டப் பலர் நடிக்­கி­றார்­கள். வேல்­ராஜ் ஒளிப்­ப­திவு செய்ய, இளை­ய­ராஜா இசை­ய­மைக்­கி­றார். கலை இயக்­கு­நர் ஜாக்­கிக்கு இது ஒரு சவா­லான படம் என்று கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் இது­வரை பட­மாக்­கப்­பட்ட காட்­சி­களை வைத்­துப் பார்க்­கும்­போது விடு­தலை படத்­தின் நீளம் கருதி, இரண்டு பாகங்­க­ளாக திரை­யிட முடிவு செய்­துள்­ளா­ராம் வெற்­றி­மா­றன். மேலும், படம் முழு­மை­யா­கத் தயா­ரா­ன­தும் உலகத் திரைப்­பட விழாக்­களில் முத­லில் திரை­யி­டப்­ப­டு­மாம். அதன் பிற­கு­தான் திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­கும் எனத் தெரிகிறது.