திரைத் துளிகள்

 ஒருவழியாக திரைகாண உள்ளது அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியுள்ள 'சதுரங்க வேட்டை 2' படம். நிர்மல் குமார் இயக்கியுள்ள படம் இது. கடந்த 2014ஆம் ஆண்டு மனோ பாலா தயாரிப்பில் நட்ராஜ் நடித்து வெளிவந்த 'சதுரங்க வேட்டை' முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் முதல் பாகத்தை இயக்கிய வினோத், இரண் டாம் பாகத்துக்கான கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். எப்போதோ வெளியீடு கண்டிருக்க வேண்டிய இப்படத்தை பல தடைகளைக் கடந்து இப்போது திரையரங்குகளில் வெளியிட உள்ளனர். இரண்டாம் பாகத்தில் அரவிந்த்சாமி, திரிஷா இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 7ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 நடிகை இலியானாவுக்கு அண்மைக்காலமாக சொல்லிக்கொள்ளும்படி பெரிய வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. தற்போது ஒரேயோர் இந்திப் படத்தில் மட்டும் நடித்து வருவதாகத் தகவல். எனினும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயங்குகிறார். இந்நிலையில் கடற்கரைப் பகுதியில், நீச்சல் உடையில் வலம் வருவதையும் தன் தோழிகளுடன் நீச்சலடித்து மகிழ்வதையும் படம்பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார் இலியானா. இதைப் பார்த்த ரசிகர்கள் பலர், நீச்சல் உடையில் கும்மாளமிடுவதை இந்த அளவுக்கு கவர்ச்சியாகப் படம்பிடித்துப் பகிர வேண்டுமா என கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு, "கடற்கரை என்றால் நீச்சல் உடை கண்டிப்பாக இருக்கும். அப்போது செல்ஃபி படம் எடுப்பதும் அவசியம்," என்று பதிலளித்துள்ளார் இலியானா.

 'திரெளபதி', 'ருத்ரதாண்ட வம்' என இரண்டு சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியுள்ள மோகன்ஜி, அடுத்து இயக்கி வரும் படம் 'பகாசூரன்'. இதில் கதை நாயகனாக நடித்து வருகி றார் இயக்குநர் செல்வராக வன். அண்மையில்தான் இப்படத்தின் சுவரொட்டியை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்ட தாம். இத்தகவலை தமது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் மோகன்ஜி. படத்தின் காட்சிகள் வெகு சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை யாரும் பயணிக்காத கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகி உள்ளது என்றும் அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார். 'பகாசூரன்' திரைப்படம் அநேகமாக செப்டம்பர் இறுதியில் திரைகாணக்கூடும். இந்தப் படம் ரசிகர்கள் இைடயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என செல்வராகவனும் நடிகர் நட்டியும் அண்மையில் தெரிவித்திருந்தனர்.

 அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அஹ்மட் இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாகவும் டாப்சி நாயகியாகவும் நடித்து வந்த படம் 'ஜனகனமன'. சில பிரச்சினைகளால் இந்தப் படம் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், புதுப் படம் ஒன்றில் அஹ்மத்தும் ஜெயம் ரவியும் மீண்டும் இணைந்துள்ளனர். இதில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார்.

 நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். 1500 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் முந்தைய சாதனையான 16:06:43 என்பதை முறியடித்து, 16:01:73 நேரத்துக்குள் நீந்தி முடித்து சாதித்துள்ளார் வேதாந்த்.

, :   

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!