பாராட்டு தெரிவித்த ரஜினி

பாராட்டு தெரிவித்த ரஜினி

1 mins read
1ddefb2e-f37a-48d4-b15a-3dccb8e18f45
-

பார்த்­தி­ப­னின் 'இர­வின் நிழல்' படத்தைப் பார்த்த ரஜி­னி­காந்த், உட­ன­டி­யாக அவரை நேரில் அழைத்து பாராட்டு தெரி­வித்­துள்­ளார்.

தர­மான படைப்­பு­களை உட­னுக்­கு­டன் பாராட்­டு­வதை வழக்­க­மா­கக் கொண்­டுள்­ளார் ரஜினி. அந்த வகை­யில் 'இர­வின் நிழல்' படத்­தை­யும் பாராட்டி உள்­ளார்.

"இந்­தத் திரைப்­ப­டத்தை அசாத்­திய முயற்­சி­யு­டன் ஒரே 'ஷாட்'டில் பட­மாக்கி அனை­வ­ரது பாராட்­டு­க­ளை­யும் பெற்று உலக சாதனை படைத்­தி­ருக்­கும் நண்­பர் பார்த்­தி­பன் அவர்­க­ளுக்­கும் அவ­ரது படக்குழு­வி­ன­ருக்­கும் மதிப்­பிற்­கு­ரிய ஏ.ஆர்.ரஹ்­மான் அவர்­க­ளுக்­கும் முக்­கி­ய­மாக படம்­பி­டித்த ஒளிப்­ப­தி­வா­ளர் ஆர்­தர் வில்­சன் அவர்­க­ளுக்­கும் எனது மன­மார்ந்த பாராட்­டு­களும் வாழ்த்து­களும்," என்று தமது டுவிட்­டர் பதி­வில் குறிப்பிட்டுள்ளார் ரஜினி.

மேலும், பார்த்­தி­ப­னுக்கு ரஜினி எழு­திய கடி­தம் ஒன்று, இரு­வ­ரது புகைப்­ப­டத்­து­டன் சமூக ஊட­கங்­களில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது.