இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவா கதாநாயகனாக நடித்துள்ள 'காசேதான் கடவுளடா' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு இன்று வெளியாகிறது. இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.
சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா நடிப்பில் கடந்த 1972ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் 'காசேதான் கடவுளடா'. தற்போது அப்படத்தை தமிழிலேயே மறுபதிப்பு செய்துள்ளனர்.
இதில் யோகிபாபு, சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவாவும் பிரியா ஆனந்தும் ஏற்கெனவே 'வணக்கம் சென்னை', 'சுமோ' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இப்போது மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர்.

