கேரளாவைச் சேர்ந்த பழங்குடி பாடகருக்கு சிறந்த பெண் பாடகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. 'அய்யப்பனும் கோஷியும்' எனும் மலையாளப் படத்தில் பாடியதற்காக நஞ்சம்மாவுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
லதா மங்கேஷ்கர், கே.எஸ் சித்ரா, எஸ். ஜானகி போன்ற முன்னணி பாடகர்கள் இவ்விருதை வென்றுள்ளனர். இந்தப் பட்டியலில் இப்போது 62 வயதான நஞ்சம்மாவும் இடம்பிடித்துள்ளார்.
திருவாட்டி நஞ்சம்மாவுக்கு கேரள முதலமைச்சர் உள்ளிட்ட பலர் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
அட்டப்பாடி பகுதியில் ஒரு சிறிய மலைக்கிராமத்தில் வசிக்கும் நஞ்சம்மா இவ்விருதை தனது இருளர் சமூகத்துக்கு அர்ப்பணிப்பதாகக் கூறியுள்ளார்.

