பயில்வானுடன் மோதிய ரேகா

பயில்வானுடன் மோதிய ரேகா

1 mins read
09dba399-d433-4ff5-9dd6-fb7767296b12
பயில்வானுடன் வாக்குவாதம் செய்யும் ரேகா நாயர். -

'இர­வின் நிழல்' படத்­தில் தாம் நடித்­தி­ருப்­பது குறித்து நடி­க­ரும் செய்தி­யா­ள­ரு­மான பயில்­வான் ரங்­க­நா­தன் தரக்­கு­றை­வாக விமர்­சித்­துள்­ள­தா­கப் புகார் எழுப்பி உள்­ளார் நடிகை ரேகா நாயர்.

அது மட்­டு­மல்ல, சென்னை கடற்­க­ரைப் பகு­தி­யில் நடைப்­ப­யிற்சி­யில் ஈடு­பட்­டி­ருந்த பயில்­வான் ரங்­க­நா­த­னு­டன் அவர் கடும் வாக்­கு­வா­தத்­தி­லும் ஈடு­பட்­டார்.

இரு­வ­ரும் கார­சா­ர­மா­கப் பேசிக்­கொள்­ளும் காணொ­ளிப் பதிவு சமூக ஊட­கங்­களில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது.

சமூக ஊட­கங்­களில் பயில்­வான் ரங்­க­நா­தன் நடி­கை­கள் குறித்து மோச­மாக விமர்­சிப்­ப­தாக புகார் எழுந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், 'இர­வின் நிழல்' படத்­தில் ரேகா நாய­ரின் நடிப்பு குறித்­தும் அவர் விமர்­சித்­துள்­ளார். இதை­ய­டுத்து, ரங்­க­நா­த­னு­டன் அவர் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­டார்.

"என்­னைப் பற்றி விமர்­சிக்க நீங்­கள் யார்? நடி­கை­கள் குறித்து விமர்­சிக்க உங்­க­ளுக்கு அனு­மதி கொடுத்­தது யார்?" என்று சர­மாரி­யாக கேள்­வி­களை அடுக்­கி­னார் ரேகா நாயர்.

இதுகுறித்து பின்­னர் விளக்­கம் அளித்த பயில்­வான் ரங்­க­நா­தன், எது­வாக இருந்­தா­லும் காவல் நிலை­யத்­தில் பேசிக்­கொள்­ள­லாம் என்று தாம் கூறி­ய­தா­க­வும் அதைக்­கேட்­ட­தும், ரேகா நாயர் உடனே கிளம்­பிச் சென்­ற­தா­க­வும் தெரி­வித்­துள்­ளார்.

திரை­யு­ல­கில் இருந்துகொண்டே அத்­து­றை­யைச் சார்ந்­த­வர்­கள் குறித்து கேவ­ல­மாக விமர்­சிக்­கும் போக்கை ஏற்கமுடி­யாது என்­கி­றார் ரேகா நாயர்.

இந்­நி­லை­யில், அவ­ரும் பொது வெளி­யில் தவ­றா­கப் பேசி­யி­ருப்­ப­தாக இணை­ய­வா­சி­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

பயில்­வான் ரங்­க­நா­த­னின் விமர்­ச­னங்­கள் குறித்து திரையுலகி னர் மத்­தி­யில் அதி­ருப்தி அதி­கரித்து வரு­வ­தா­க­வும் கூறப்­படுகிறது.