அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனில் நல்ல உபதேசங்களை, பெற்றோர், ஆசிரியர்கள் சொல்லும் நல்ல விஷயங்களைக் கேட்க வேண்டும் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
நல்ல சிந்தனைகளை முன்வைக் கும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றும் சொத்துகளை விட்டுச்செல்வதைவிட நாம் நோயாளியாக இருந்துவிடக்கூடாது என் பதில் கவனம் தேவை என்றும் சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
"மனிதர்கள் கடந்த காலங்களையும் எதிர்காலத்தையும் நினைத்து கவலை கொள்வர். ஆனால் குழந்தைகள் அப்படியல்ல. வலி களில் இருந்து வெளிவர நிகழ் காலத்தில் சிந்தனையை வைக்க வேண்டும்.
"வாழ்க்கையில் பணம், பெயர், புகழ் எல்லாவற்றையும் கடந்து நிம்மதியாக இருக்கவேண்டும் எனில் நல்ல உடல்நலம் வேண்டும்.
"என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால் சித்தர்களிடம் உள்ள நிம்மதி, மகிழ்ச்சியில் பத்து விழுக்காடு கூட இதுவரை எனக்கு கிடைக்கவில்லை," என்றார் ரஜினி.
தாம் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் தமக்கு மிகுந்த மனநிறைவைக் கொடுத்தது 'ராகவேந்திரா', 'பாபா' ஆகிய இரு படங்கள்தான் என்று குறிப்பிட்ட அவர், அவ்விரு படங்கள் வெளியான பிறகு அந்த இருவர் குறித்து அனைவருக்கும் தெரிய வந்தது என்றார்.
"என் ரசிகர்கள் இருவர் சன்னியாசியாக மாறியுள்ளனர். ஆனால் நான் இன்னும் நடிகனாகவே இருக்கிறேன்.
"இமயமலையில் இயற்கையாகவே அமைந்துள்ள குகைகள் சொர்க்கம் போல் காட்சியளிக்கும். அந்தக் குகைகளில் சில மூலிகைகள் கிடைக்கும். அவற்றைச் சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கான புத்துணர்ச்சி அதிகமாக கிடைக்கும். கங்கை நதி ஏன் புனிதம் என்றால், அதில் ஏராளமான மூலிகைகள் கலக்கின்றன.
"நாம் அனைவரும் சரியான நேரத்தில், நல்ல உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யவேண்டும். சிறு வயதில் உடல்நலனைக் காப்பதைவிட, வயது முதிர்ந்தபின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை," என்றார் ரஜினிகாந்த்.
இமயமலைப் பயணத்தின்போது ரஜினி.

