சிவகார்த்திகேயன் தற்போது 'பிரின்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நீண்ட இடைெளிக்குப் பிறகு கவுண்டமணி நடிக்க உள்ளார். இதற்காக அவர் சில நிபந்தனைகளை விதித்ததாகவும் அதற்கு படக்குழு சம்மதித்திருப்ப தாகவும் கூறப்படுகிறது. மேலும், அவருக்கு பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்.
நடிகை இலியானா செபாஸ்டின் லாரன்ட் மைக்கேல் என்பவரை காதலித்து வருவதாகவும் கடந்த ஆறு
மாதங்களாக இருவரும் ஜோடியாக சுற்றித்திரிவதாகவும் கூறப்படுகிறது. செபாஸ்டின் லாரன்ட் முன்னணி இந்தி நடிகை கேத்ரீனா கைஃபின் சகோதரர் ஆவார். எனினும் காதல் விவகாரம் குறித்து இலியானா இதுவரை வாய்திறக்கவில்லை.
'புஷ்பா-2' பட வில்லனாக நடிக்க, விஜய்சேதுபதி முப்பது கோடி ரூபாய் சம்பளம் பெற இருப்பதாகக் கூறப்படுகிறது. 'சுந்தரபாண்டியன்', 'விக்ரம் வேதா', 'பேட்ட', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற படங்களில் வில்லனாக மிரட்டி இருந்தார் விஜய் சேதுபதி. இதையடுத்து, அவரை வில்லனாக நடிக்க வைக்க பெரும் போட்டி நிலவு கிறது. இதனால் அவரது சம்பள மும் மளமளவென உயர்ந்து வரு கிறது. இந்நிலையில், 'புஷ்பா-2' படத்தில் அவர் நடிக்கவேண்டும் என அதன் நாயகன் அல்லு அர்ஜுன் கேட்டுக்கொண்டதால் அதில் நடிக்க சம்மதித்துள்ளா ராம் விஜய் சேதுபதி.
'நதி' என்ற படத்தில் அறிமுக நாயகனுடன் எந்தவிதத்
தயக்கமும் இல்லாமல் நடிக்க 'கயல்' ஆனந்தி ஒப்புக்கொண்ட
தாகப் பாராட்டுகிறார் அப்படத் தின் இயக்குநர் தாமரை செல்வன். அனுபவ நடிகர், நடிகைகள் புதுமுகங்களுக்கு ஆதரவு அளித்தால்தான் திரையுலகம் வளர்ச்சி காணும் என்றும் நல்ல படைப்புகள் உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
'கார்கி' படத்தின் வெற்றி தமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்துள்ள தாகச் சொல்கிறார் சாய் பல்லவி. இந்தப் படத்தை திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்ததாகவும் கூறியுள்ளார். ரசிகர்கள் கைதட்டி பாராட்டியதைவிட, தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டதுதான் மனநிறைவை அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

