விருது பெற்ற விளையாட்டு வீராங்கனை

விருது பெற்ற விளையாட்டு வீராங்கனை

2 mins read
a9a97418-04d3-40a1-a323-f518d7f08a43
'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் லட்சுமி பிரியா சந்திரமௌலி. -

சிறந்த துணை நடி­கைக்­காக தேசிய விரு­தைப் பெற்­றுள்­ளார் லட்­சுமி பிரியா சந்­தி­ர­மௌலி. 'சிவ­ரஞ்­சனி­யும் இன்­னும் சில பெண்­களும்' படத்­தில் சிறப்­பாக நடித்­த­தற்­காக அவ­ருக்கு விருது கிடைத்­துள்­ளது.

பல தமிழ்ப் படங்­களில் நடித்­தி­ருந்­தா­லும், ரசி­கர்­கள் மன­தில் இடம்­பி­டிக்­கும் அள­வுக்கு லட்­சுமி பிரியா­வுக்கு நல்ல வாய்ப்­பு­கள் அமை­ய­வில்லை. இந்­நி­லை­யில், வசந்த் இயக்­கத்­தில் உரு­வான படம் இவருக்கு தேசிய விரு­தைப் பெற்றுத் தந்­துள்­ளது.

தேசிய அள­வி­லான கிரிக்­கெட் போட்­டி­களில் பங்­கேற்ற வீராங்­கனை­யான லட்­சுமி பிரியா, மனித­வளத் துறை­யில் முது­கலை பட்­டம் பெற்­றுள்­ளார். தனி­யார் நிறு­வ­னத்­தில் மனி­த­வள அதி­கா­ரி­யா­கப் பணி­யாற்­றிய அனு­ப­வ­மும் உண்டு.

'சாந்தி நிலையம்', 'தர்ம யுத்தம்' உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர் களில் நடித்துள்ள லட்சுமி பிரியா, 'சர்வைவர்' ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

இதற்­கி­டையே, தேசிய விருது என்ற அங்­கீ­கா­ரம் தொடர்ந்து நல்ல திரைப்­ப­டங்­களில் பணி­யாற்­று­வதற்கு ஊக்­க­ம­ளிப்­ப­தாக நடி­கர் சூர்யா தெரி­வித்­துள்­ளார்.

'சூர­ரைப் போற்று' படத்­துக்கு ஐந்து விரு­து­கள் கிடைத்­தி­ருப்­பது பெரு­ம­கிழ்ச்சி அளிப்­ப­தா­க­வும் தன்னைப்போல் விருது பெற்­றுள்ள அனை­வ­ருக்­கும் வாழ்த்து தெரி­விப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

நேற்று தனது பிறந்­த­நாளைக் கொண்­டா­டிய சூர்­யா­வுக்கு, நடிகர் மம்­முட்டி வாழ்த்து தெரி­வித்­தார்.

"தேசிய விருது அழ­கான பிறந்­த­நாள் பரிசு. அன்­புள்ள சூர்­யா­வுக்கு பிறந்­த­நாள் வாழ்த்­து­கள்," என்று தமது சமூக ஊட­கப் பக்­கத்­தில் மம்­முட்டி குறிப்பிட்டிருந்­தார்.

இதற்கிடையே, தமக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை என 'சூரரைப் போற்று' படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி கூறியுள்ளார்.

விருதுப் பட்டியலில் தமது பெயர் இருப்பதைப் பார்த்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.