கிருத்திகா: குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்

கிருத்திகா: குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்

2 mins read
def30740-9711-4f80-b9e4-fc0d01be9913
'பேப்பர் ராக்கெட்' இணையத் தொடரில் இடம்பெறும் ஒரு காட்சி. -

கிருத்­திகா உத­ய­நிதி இயக்­கத்­தில் காளி­தாஸ் ஜெய­ராம், தான்யா ரவிச்­சந்­தி­ரன், கரு­ணா­க­ரன், ரேணுகா உள்­ளிட்ட பலர் நடிப்­பில் உரு­வாகி உள்­ளது 'பேப்­பர் ராக்­கெட்' இணை­யத்­தொ­டர். எதிர்வரும் 29ஆம் தேதி­யில் இருந்து முன்னணி ஓடிடி தளத்­தில் இது ஒளி­ப­ரப்­பாக உள்­ளது.

சிறு வய­தில் காகி­தத்­தில் ராக்­கெட் செய்து பறக்­க­வி­டா­த­வர்­கள் இருப்­பார்­களா என்­பது சந்­தே­கம்­தான். அந்­தக் காகித ராக்­கெட் கொடுக்­கும் மகிழ்ச்சி விலை உயர்ந்த பொம்­மை­க­ளால் கிடைத்து­வி­டாது.

"இது முழுக்க முழுக்கப் பய­ணத்­து­டன் சம்­பந்­தப்­பட்ட கதை. ஒவ்­வொரு மனி­த­ருக்­கும் பய­ணம் என்­பது மிக முக்­கி­ய­மா­னது. நாம் இப்­போது வாழ்ந்து கொண்­டி­ருக்­கும் உல­கம் மிக­வும் அழ­கா­னது. ஆனால், நம்­மில் பலர் அந்த அழகை ரசிப்­ப­தில்லை. இதற்கு என்ன கார­ணம் என்­பதை அல­சும் கதை­தான் பேப்­பர் ராக்­கெட்," என்­கி­றார் கிருத்­திகா.

முக்­கி­ய காட்­சி­களைத் தமி­ழ­கத்­தின் வெவ்­வேறு பகு­தி­களில் பட­மாக்கி உள்­ள­னர். அனைத்­துமே கண்­க­ளைக் கவ­ரும் அழ­கிய ஓவியம் போன்று காட்­சி­ய­ளிக்­கும் இடங்­க­ளாக இருக்­கும் என்­கி­றார்.

"பொது­வாக இணை­யத்­தொ­டர் என்­றாலே திகில், கொலை, வன்­முறை என்­று­தான் வகைப்­ப­டுத்து­கின்­ற­னர். நான் அவற்­றில் இருந்து மாறு­பட்டு நிற்­கி­றேன். குடும்­பத்­து­டன் ஒன்­றாக அமர்ந்து பார்க்கக்­கூ­டிய தொடரை உரு­வாக்கி உள்­ளேன். மேலும், பெண் கதா­பாத்­தி­ரங்­க­ளுக்குக் கூடு­தல் முக்­கி­யத்­து­வம் இருக்­கும். இக்கதையை ஏன் திரைப்­ப­ட­மாக எடுக்­க­வில்லை என்று கேட்­கி­றார்­கள். இக்கதையை எழு­தத் தொடங்­கி­ய­போதே சினி­மா­வுக்கு ஏற்ற அமைப்­பு­டன் எழுத முடி­ய­வில்லை. அந்தச் சம­யத்­தில் இணை­யத் தொடர் குறித்­தும் பெரி­தா­கப் பேசப்­ப­ட­வில்லை. முன்பு எழு­திய கதையை ஏன் இப்­போது இணை­யத்தொட­ராக எடுக்­கக்­கூடாது என்ற யோசனை வந்­தது. அது இப்­போது சாத்­தி­ய­மாகி உள்­ளது," என்கிறார் கிருத்திகா.