'அழுகை நிற்கவே இல்லை'

'அழுகை நிற்கவே இல்லை'

3 mins read
63d66847-6230-4257-b36a-cb5444c3eeb6
-

சில கதா­பாத்­தி­ரங்­களில் நடித்தபிறகு அவற்­றில் இருந்து வெளி­யே­று­வது கடி­ன­மாக இருப்­ப­தா­கச் சொல்­கி­றார் ஐஸ்­வர்யா லட்­சுமி.

அண்­மை­யில், குடும்ப வன்­முறை குறித்து விரி­வாக அல­சும் தெலுங்­குப் படம் ஒன்­றில் இவர் நடித்து முடித்­துள்­ளார். அப்­போ­து­தான் இது­போன்ற அனு­ப­வம் கிடைத்­த­தாம்.

"குறிப்­பிட்ட ஒரு காட்­சி­யில் நடித்­த­போது அதன் தாக்­கத்தை வெகு­வாக உணர்ந்­தேன். அதில் நான் கதறி அழ­வேண்­டும். இயக்­கு­நர் சொன்­ன­ப­டியே நடித்து முடித்­த­தும் படக்­கு­ழு­வி­னர் கைதட்­டிப் பாராட்­டி­னர். இயக்­கு­நர் 'கட்' என்று சொன்னபிற­கும் வெகு நேரம் அழு­து­கொண்டே இருந்­தேன்.

"அதற்கு முன்பு நான் இவ்­வாறு அழு­தது கிடை­யாது. ஒரு­வேளை நான் நடிக்­கும் விதம் இப்­போது மாறி இருப்­ப­தாக நினைத்­துக்­கொண்­டேன்," என்­கி­றார் ஐஸ்­வர்யா.

பிற நடி­கை­கள் தாங்­கள் ஏற்று நடிக்­கும் பாத்­தி­ரத்­துக்­காக பயிற்சி மேற்­கொள்­வது, தக­வல்­க­ளைச் சேக­ரிப்­பது என்று ஆய்­வுபூர்­வ­மான அணு­கு­மு­றை­யைக் கொண்­டி­ருக்­கி­றார்­கள் எனில், இவர் அதற்கு நேர்­மா­றாக உள்­ளார். தன்­னு­டன் நடிப்­ப­வர்­க­ளி­டம் அவர்­க­ளு­டைய சொந்த அனு­பவங்­க­ளைக் கேட்­டுத் தெரிந்து கொள்­கி­றார்.

"பள்ளி நாள்­க­ளி­லேயே நான் இப்­ப­டித்­தான். வருப்­பில் ஆசி­ரி­யர் சொல்­வதை இயந்­திர கதி­யில் எழுதி வைத்­துப் படிப்­ப­தில் எனக்கு உடன்­பாடில்லை. மாறாக, செயல் அள­வில் அவற்­றைச் சோதித்­துப்­ பார்க்க விரும்­பு­வேன்.

"இன்று திரை­யு­ல­கி­லும் அதைத்­தான் செய்­கி­றேன். ஒரு நடி­கை­யாக பல­த­ரப்­பட்ட மக்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டு­வது அவ­சி­யம் என்­பது என் கருத்து.

"உதா­ர­ணத்­துக்கு, ஒரு துக்க காட்­சி­யில் நடிக்க வேண்டி இருந்­தது. அது­கு­றித்து எனது தோழி­கள் சில­ரி­டம் பேசி­னேன். தங்­க­ளுக்கு நெருக்­க­மாக இருந்­த­வர்­களை இழந்­த­போது என்ன செய்­த­னர் என்­ப­தைக் கேட்­ட­றிந்­தேன். அவர்­கள் அனை­வ­ருமே தங்­கள் துக்­கத்தை வெளிப்­படுத்­த­வும் சமா­ளிக்­க­வும் ஒரே வழி­மு­றை­யைக் கையாண்­டுள்­ள னர் எனத்தெரிந்­தது.

"அதன் பிறகு துக்க காட்­சி­யில் நடித்­த­போது நான் மிக­வும் இயல்­பாக நடித்­தி­ருப்­ப­தாக இயக்­கு­நர் என்­னைப் பாராட்­டி­னார்," என்று சொல்­லும் ஐஸ்­வர்யா, தற்­போது நாய­கியை முன்­னி­லைப்­ப­டுத்­தும் கதை­க­ளி­லும் நடிக்­கத் தொடங்கி உள்­ளார்.

'அர்ச்­சனா 31 நாட் அவுட்' என்ற மலை­யா­ளப் படத்­தில் தனி நாய­கி­யாக நடித்­துள்­ளார். அதை­ய­டுத்து 'குமரி' என்ற பட­மும் நாய­கியை முன்­னி­லைப்­ப­டுத்தி உரு­வாகி உள்­ளது.

"முழுப் படத்­தை­யும் எனது தோள்­களில் தாங்க வேண்­டும் என்று இயக்­கு­நர்­கள் கூறும்­போது ஒரு­வகை­யில் பதற்­ற­மா­க­வும் அதேசம­யம் உற்­சா­க­மா­க­வும் உணர்­கி­றேன். இது மிகுந்த அழுத்­தம் தரக்­கூடிய விஷ­யம்.

"கொரோனா நெருக்­க­டி­க­ளைக் கடந்து இவ்­விரு படங்­களும் உரு­வாகி உள்­ளன. இவற்­றுக்கு கிடைக்­கும் வர­வேற்­பைப் பொறுத்து எனது அடுத்­த­கட்ட நகர்­வு­கள் இருக்­கும்," என்று சொல்­லும் ஐஸ்­வர்யா, தமக்­கான வாய்ப்­பு­கள் தொடர்ந்து அமை­வது நம்­பிக்­கை­யூட்­டு­வ­தாக உள்­ளது என்­கி­றார்.

அதே­ச­ம­யம் தொடர் படப்­பி­டிப்­பு­கள் கார­ண­மாக தமது பெற்­றோ­ரு­டன் நேரம் செல­விட முடி­யா­மல் தவிக்­கி­றா­ராம்.

"நான் சினி­மா­வில் நடிப்­பதை பெற்­றோர் விரும்­ப­வில்லை. மருத்­து­வத்­து­றை­யில் நான் பெரி­தா­கச் சாதிக்கவேண்­டும் என்­பதே அவர்­க­ளு­டைய விருப்­பம். எப்­ப­டியோ சமா­தா­னப்­ப­டுத்தி நடிக்க வந்­துள்­ளேன்.

"இப்­போது பெற்­றோ­ரு­டன் உட்­கார்ந்து பேசு­வ­தற்­குக்­கூட நேர­மில்லை. அத­னால் வருத்­தப்­ப­டு­கி­றார்­கள்," என்­கி­றார் ஐஸ்­வர்யா.

தமி­ழில் 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தில் நடித்து முடித்­தி­ருப்­ப­வர், அதன் வெளி­யீட்டை ஆவ­லு­டன் எதிர்­நோக்கி உள்­ளார். இந்த வாய்ப்பு கிடைக்­கும் எனக் கன­வில்­கூட நினைத்­துப் பார்த்­த­தில்லை என்­கி­றார்.

"இயக்­கு­நர் மணி­ரத்­னம் படத்­தில் நடிப்­பது என்­பது அனை­வருக்­குமே உள்ள கனவு. எனக்கு அது நிறை­வேறி உள்­ளது. அவர் பணி­யாற்­று­வதை அரு­கில் இருந்து பார்ப்­பதே பெரிய விஷ­யம். அவ­ரது இயக்­கத்­தில் நடிப்­பது எல்­லோ­ருக்­கும் அமை­யாத வாய்ப்பு.

"ஏதோ சிறிய படத்தை இயக்­கு­வ­து­போல் கொஞ்­சம்­கூட பதற்­றமோ, கோபமோ இல்­லா­மல் இந்­தப் படத்தை இயக்கி முடித்­துள்­ளார்.

"நிச்­ச­ய­மாக இது உலக அள­வில் பேசப்­படும் பிரம்­மாண்ட படைப்­பாக இருக்­கும்," என்­கி­றார் ஐஸ்­வர்யா லட்­சுமி.

, :   