திரைத் துளிகள்

திரைத் துளிகள்

1 mins read
9b9ec200-3a9f-45b1-acf4-3a9948e55915
-
multi-img1 of 2

 நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்க உள்ளார் பாண்டியராஜன். திகில் நிறைந்த பேய்ப்படமாக உருவாகும் 'ரியா'வில் அவரை நாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளனர். அறிமுக இயக்குநர் கார்த்திக் சிவன் இயக்கும் இப்படத்தில் பாண்டிய ராஜனுடன் நடிகர் செந்திலும் முக்கிய பாத்திரத்தில் தோன்று கிறார். பழைய இருட்டுபாளையம் என்ற ஊரில் பேய் பங்களா ஒன்றில், தினம் தினம் நடக்கும் பலவித மர்ம சம்பவங்களால் ஊர் மக்கள் அச்சத்தில் இருக்க, இதைப் பயன்படுத்தி ஒரு கும்பல் அங்கு சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுகிறது. இதன் பின்னணி என்ன, சமூக விரோதிகள் சிக்குகிறார்களா என்பதுதான் கதை.

 வில்லி கதாபாத்திரத்தில் நடித்த பிறகே தமக்கு நாயகி யாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகச் சொல்கி றார் திரிஷா. 'கொடி' படத்தில் தனுஷுக்கு வில்லியாக அவர் நடித்திருந்தார். ஆனால் வில்லி யாக நடிப்பது என தாம் எடுத்த முடிவு தவறானது என இப் போது உணர்வதாக தன் தோழி களிடம் அடிக்கடி புலம்பு கிறாராம். "கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் குறைந்துபோனது ஒருபுறம் இருக்க, இரண்டாவது நாயகியாக நடிக்கக் கேட்டும் சிலர் அணுகு கிறார்கள்," என்று வேதனைப்படுகிறார் திரிஷா.