சமந்தா: இருவரையும் ஒரே அறையில் அடையுங்கள்

சமந்தா: இருவரையும் ஒரே அறையில் அடையுங்கள்

1 mins read
30329706-7145-4cc2-ae95-0c1c041b7f06
-

முன்­னாள் கண­வர் நாக சைதன்யா குறித்து தொடர்ந்து கேள்­வி­கள் எழுப்­பப்­பட்­ட­தால் நடிகை சமந்தா கோபத்­தில் வெடித்­தார்.

மும்­பை­யில் நடை­பெற்ற ஒரு நிகழ்ச்­சி ஒன்றில் நடி­கர் அக்­‌ஷய்­கு­மாரு­டன் கலந்­து­கொண்­டார் சமந்தா. அப்­போது அங்­கி­ருந்த ரசி­கர்­கள் தொடர்ந்து அவ­ரது மண­முறிவு குறித்து மட்­டுமே கேள்­வி­களைக் கேட்­ட­னர்.

இத­னால் ஒரு­ கட்­டத்­தில் பொறுமை இழந்த அவர், "வேண்டு­மா­னால் எங்­கள் இரு­வ­ரை­யும் ஒரே அறை­யில் அடைத்து வையுங்­கள். ஆனால், அங்கு கூர்­மை­யான பொருள்­கள் எது­வும் இருக்­கக்­கூடாது. இந்­தப் பதில் போதுமா?'' என்று கேட்­டார்.

இதன் மூலம் நாக சைதன்யா மீதான தனது கோபத்தை அவர் காட்­டத்­து­டன் வெளிப்­ப­டுத்தி இருப்­ப­தாக மும்பை ஊட­கங்­கள் குறிப்பிட்டுள்­ளன.