'ஒற்றைக் காலுடன் நடனமாடி, சண்டையிட்டேன்'

'ஒற்றைக் காலுடன் நடனமாடி, சண்டையிட்டேன்'

2 mins read
50c5eb8d-41bb-4341-b2b0-0cb32421672b
-

தாம் நாய­க­னாக நடித்­துள்ள 'பொய்க்­கால் குதிரை' படத்­தில் மாயா­ஜா­லம் நிகழ்த்­தப்­பட்­டுள்­ள­தாகச் சொல்­கி­றார் பிர­பு­தேவா.

இப்­ப­டத்­தின் வெளி­யீட்­டுத் தேதியை அறி­விக்­கும் நிகழ்­வில் பங்­கேற்ற அவர், இயக்­கு­நர் சொன்ன கதை பிடித்­தி­ருந்­த­தால் தயக்­கம் இன்றி நடிக்க ஒப்­புக்­கொண்­ட­தா­கக் குறிப்­பிட்­டார்.

'பொய்க்­கால் குதிரை' படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளி­யீடு காண்­கிறது. 'ஹர ஹர மஹா­தே­வகி', 'இருட்டு அறை­யில் முரட்டு குத்து', 'கஜி­னி­காந்த்', 'இரண்­டாம் குத்து' ஆகிய படங்­களை இயக்­கிய சந்­தோஷ் பி.ஜெயக்­கு­மார் இந்­த­ப் படத்தை இயக்­கி­யுள்­ளார்.

வர­லட்­சுமி சரத்­கு­மார், ரைசா வில்­சன் என இரு நாய­கி­கள் உள்ளனர். டி. இமான் இசை­ய­மைத்­துள்­ளார்.

இந்­தப் படத்­துக்­காக ஒற்­றைக் காலில் நட­ன­மாட வேண்­டி­யி­ருந்­த­தா­கக் குறிப்­பிட்ட பிர­பு­தேவா, நடன அசை­வு­களை நடன இயக்­கு­நர் சதீஷ் சிறப்­பாக அமைத்­தி­ருந்­த­தாகப் பாராட்­டி­னார்.

"சதீ­ஷின் உத­வி­யா­ளர்­கள் நன்கு பயிற்சி எடுத்து, என்னை விட நன்­றாக ஆடி­னார்­கள். அத­னால் ரசி­கர்­க­ளுக்கு இப்­ப­டத்­தின் பாடல்­களும் நடன அசை­வு­களும் நிச்­ச­யம் பிடிக்­கும்.

"சில காட்­சி­களை படப்­பி­டிப்பு தளத்­தில் பார்­வை­யி­டு­வோம். சில காட்­சி­களை பின்­னணி பேசும்­போது பார்ப்­போம். இரண்டு அனு­ப­வங்­களும் முற்­றி­லும் மாறு­படும். அதே­போல், இந்­தப் படத்­தின் பின்­னணி இசைக்­குப் பிறகு, படத்­தைப் பார்க்­கும்­போது நான் நன்­றாக நடித்­தி­ருப்­ப­தாக உணர்ந்­தேன். இதற்கு கார­ணம் இசை­ய­மைப்­பா­ளர் டி.இமானின் பின்­னணி இசைதான். அதற்­காக அவ­ருக்கு நன்றி.

"படத்­தில் ஒற்­றைக்­கா­லு­டன் சண்­டைக் காட்­சி­களில் நடித்­த­போது எந்­தச் சிர­ம­மும் இல்லை. சண்­டைப் பயிற்­சி­யா­ளர் தினேஷ் காசி, ஒவ்­வொரு காட்­சி­யை­யும் எளி­தா­க­வும் விரை­வா­க­வும் நேர்த்­தி­யா­க­வும் பட­மாக்­கி­னார். 'பொய்க்­கால் குதிரை' படத்­தில் படத்­தொகுப்பு சிறப்­பாக இருக்­கும்.

"ஏனெ­னில் நான் கதையை கேட்­கும்­போதே, 'இந்த கதை ரசி­கர்­க­ளுக்கு புரி­யுமா?' என்று தான் இயக்­கு­ந­ரி­டம் கேட்­டேன். ஆனால் படம் பார்த்த பிறகு படத்­தொ­குப்­பா­ள­ரும் இயக்­கு­ந­ரு­மா­கச் சேர்ந்து மாயா­ஜா­லம் நிகழ்த்­தி­யி­ருக்­கி­றார்­கள். படத்­தொ­குப்பு பாணி வித்­தி­யா­ச­மாக இருக்­கும்," என பிரபு தேவா கூறுகிறார்.

பிர­பு­தேவா நடிப்­பில் அண்­மை­யில் வெளி­யான 'மை டியர் பூதம்' படம் நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது. இதை­ய­டுத்து 'பொய்க்­கால் குதிரை' படத்­தை­யும் சூட்­டோடு சூடாக வெளி­யி­டு­கி­றார்­கள்.

"இயக்­கு­நர் சந்­தோஷ் குமார் இதற்கு முன்­னர் வேறு மாதி­ரி­யான படங்­களை இயக்­கி­ இருக்­கி­றார் என்று சொன்­னார்­கள். ஆனால் நான் யாரை­யும் மதிப்­பீடு செய்­வ­தில்லை.

"சந்­தோஷ் என்­னி­டம் சொன்ன கதை பிடித்­தி­ருந்­தது. சொன்ன வித­மும் பிடித்­தி­ருந்­தது. படப்­பி­டிப்பு தளத்­தில் இயக்­கு­ந­ருக்கு தேவை­யான ஆளு­மைத் திறன் அவ­ரி­டம் இருந்­தது. விரை­வா­க­வும் திட்­ட­மிட்ட படி­யும் படப்­பி­டிப்பை நடத்­தி­னார்.

"இதன் மூலம் அவர் தயாரிப் பாளர்களின் இயக்குநராக இருந் தார். என்னிடம் இருந்து நல்ல நடிப்பை வெளிக்கொண்டு வந்தார். 'பொய்க்கால் குதிரை' நல்லதொரு திகில் திரைப்படமாக உருவாகி இருக்கிறது," என்கிறார் பிரபுதேவா.