திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

3 mins read
821d66fd-6fe3-41f7-a6ab-e918b1c36d6f
-
multi-img1 of 4

 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகத்தில் லட்சுமி மேனன் கதாநாயகி யாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. அதற்கும் முன்னதாக அனுஷ்கா, திரிஷா, சாய் பல்லவி என்று பல பெயர்கள் அடிபட்டன. இந்நிலையில், ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் அந்தப் படத்தில் மொத்தம் ஐந்து கதா நாயகிகள் நடிக்கின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஐந்து பேரில் நடிகை மகிமா நம்பியார் ஒருவர் என்பதும் தற்போது நடைபெற்று வரும் படப் பிடிப்பில் அவர் பங்கேற்றுள் ளார் என்றும் தெரியவந்துள்ளது. கடந்த 2005ல் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'சந்திரமுகி'. சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் பி.வாசு. முதல் பாகத்தில் நடித்த வடிவேலு மட்டும் இரண்டாம் பாகத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்.

 தாம் ஏன் காதல் திருமணம் செய்யவில்லை என்பது குறித்து நடிகர் கார்த்தி மனம் திறந்துள்ளார். அண்ணன் சூர்யா, ஜோதிகாவை காதலித்து திருமணம் புரிந்ததால், தானும் அவ்வாறு செய்து விடக்கூடாது என தன் தாயார் அறிவுறுத்திக் கொண்டே இருந்ததாக ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள் ளார். "இந்த ஒரு காரணத்தினாலேயே காதல் என்பது என் வாழ்க்கையில் இல்லாமல் போய்விட்டது. சரி, வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்யலாம் என்றால், யாரும் பெண் தரவில்லை. சுமார் ஆறு ஆண்டுகள் தேடியும் பெண் கிடைக்காத நிலையில், ஒரு கட்டத்தில் என் தாயாரே என்னிடம் வந்து, 'யாரையாவது காதலிக்கிறாய் என்றால் சொல்லிவிடு. திருமணம் செய்து வைக்கிறோம்' என்றார். அதை இப்போது சொன்னால் எப்படி என்றேன். பிறகு வீட்டில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டேன்," என்கிறார் கார்த்தி.

 விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், அந்தப் படத்தில் பிரியங்கா மோகன் தான் நாயகி என்று தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் விவரமறிந்தோர் கூறுகின்றனர். தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் பிரியங்கா. 'டான்' படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்த படப்பிடிப்புக்காக துபாய் சென்ற அவர், மேலும் சில நாடுகளை வலம்வந்துள்ளார். பயணம் தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது, நடிகர் விஷாலின் உடல்நலம் குறித்து நடிகர் விஜய் விசாரித்ததாகக் கூறியுள்ளார் சுனைனா.

விஷால் நாயகனாக நடிக்கும் 'லத்தி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள அவர், அண்மையில் நடைபெற்ற அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். இதற்காக ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்தேன். நான் வந்த விமானத்தில்தான் விஜய்யும் இருந்தார். முகக் கவசத்தை அகற்றிய பிறகுதான் விஜய் என்பது தெரிந்தது. 'லத்தி' பட நிகழ்வுக்காக சென்னை செல்வதை அறிந்து, படப்பிடிப்பின்போது விஷாலுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து விசாரித்து அறிந்தார். விஷால் கவனமாக இருக்கவேண்டும் என அவரிடம் தெரிவிக்குமாறும் விஜய் கூறினார். விஜய்யின் அக்கறை வியப்பளித்தது என்கிறார் சுனைனா.