'எல்லாம் கனவுபோல் உள்ளது'

'எல்லாம் கனவுபோல் உள்ளது'

3 mins read
6e0ab1f1-20d9-46d2-b683-48f24f5c76dd
-

தாம் திரை­யு­ல­கில் அறி­மு­க­மாகி 13 ஆண்­டு­கள் கடந்­து­விட்­ட­தா­க­வும் அதை நினைக்­கும்­போது ஏதோ கன­வு­ல­கத்­தில் இருப்­பது போன்று தோன்­று­கிறது என்­றும் கூறு­கி­றார் ஷ்ருதி ஹாசன்.

தமது திரைப் பய­ணம் இது­நாள் வரை நீடித்­த­தற்கு ரசி­கர்­க­ளின் அன்­பும் ஆத­ர­வும்­தான் முக்­கிய கார­ணம் என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு 'லக்' என்ற இந்­திப் படத்­தின் மூலம் திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­னார் ஷ்ருதி. தந்தை கமல்­ஹா­சன், தாயார் சரிகா ஆகிய இரு­வருமே திரை­யு­ல­கில் தடம் பதித்­த­வர்­கள் என்ற போதி­லும், பெற்­றோ­ரின் சிபா­ரிசு இல்­லா­மல் தனிப்­பட்ட திறமையை மட்­டுமே நம்­பிச் செயல்­பட்டு, திரை­யு­ல­கில் தாக்­குப்­பி­டித்து வரு­கி­றார் ஷ்ருதி.

சூர்யா நடிப்­பில் வெளி­யான 'ஏழாம் அறிவு' தான் ஷ்ருதி தமி­ழில் அறி­மு­க­மான படம். இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழி­களில் நடிக்­கி­றார்.

"என்­னு­டைய திரை­யு­லக வாழ்க்கை ஒரு மாயா­ஜா­லம் போன்­றது. திரை­யு­ல­கில் நுழை­வேன், நடி­கை­யா­வேன் என்று ஒரு­போ­தும் நினைக்­க­வில்லை. எனக்கு விருப்­ப­மான வேறு ஏதே­னும் ஒரு துறை­யில் பணி­யாற்றவேண்­டும் என்பது­தான் என்­னு­டைய விருப்­ப­மாக இருந்­தது.

"பெற்­றோர் இரு­வ­ரும் திரை­யு­ல­கத்­தைச் சார்ந்­த­வர்­கள் என்ற போதி­லும் எனக்கு அதன் மீது பெரி­தாக எந்­த­வித ஈர்ப்­பும் இல்லை. அதே­ச­ம­யம், எனக்கு விருப்­ப­மான வேலையை எப்­படி நேசிக்க வேண்­டும் என்­ப­தை­யும் காலப்­போக்­கில் கற்­றுக்கொண்­டேன்," என்று காணொ ­ளிப் பதிவு ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார் ஷ்ருதி.

எதிர்­பா­ராத வகை­யில் சினி­மா­வில் நடிக்­கத் தொடங்­கிய பின்­னர் ஒரே படத்­து­டன் தனது நடிகை வேடம் கலை­யும் என்­று­தான் எதிர்­பார்த்­தா­ராம். எனி­னும் சினிமா உல­கம் தம்மை விட­வில்லை என்­கி­றார்.

"கடந்த 13 ஆண்டு கால­மும் நடந்­தவை எல்­லாம் ஏதோ கன­வு­போல் தோன்­று­கிறது. நடி­கை­யாக வேண்­டும் என்று நான் நினைக்­காத ஒரு தரு­ணத்­தில் காலம் எனக்கு அந்­தப் பணி­யைத்­தான் கொடுத்­தது. அத­னால் அந்­தத் துறையை நேசிக்­கக் கற்­றுக்­கொண்­டேன்.

"சினிமா என் வாழ்க்­கை­யில் மிகப்­பெ­ரிய மகிழ்ச்­சி­யாக மாறி­யுள்­ளது. இதற்­காக உண்மை­யில் நன்றி உள்­ள­வ­ளாக இருக்­கும் வகை­யில் வாழ்க்கை என்னை மாற்றி அமைத்­தி­ருக்­கிறது.

"வெற்றி, தோல்­வி­களை எப்­படி எதிர்­கொள்­வது என்­ப­தை­யும் நம்­பிக்­கை­யு­டன் எப்­ப­டிப் பணி­யாற்­று­வது என்­ப­தை­யும் கற்­றுக்கொண்­டுள்­ளேன். அதே­போல், கதை­க­ளைக் கேட்­பதி­லும் அவற்­றைத் தேர்ந்­தெ­டுப்­ப­தி­லும் அதி­லுள்ள நேர்­ம­றை­யான விஷயங்­களைப் பாராட்­டு­வது எப்­படி என்­ப­தை­யும் 13 ஆண்டு­கால அனு­ப­வம் கற்­றுக்கொடுத்­துள்­ளது," என்­கி­றார் ஷ்ருதி.

ரசி­கர்­க­ளின் அன்­புக்­கும் பாராட்­டு­களுக்­கும் நன்றி பாராட்­டும் அதேவேளை­யில் திரை­யு­ல­கில் தமக்கு ஆத­ர­வ­ளிக்­கும் நல்ல உள்­ளங்­க­ளுக்­கும் நன்­றிக்­கடன் பட்­டுள்­ள­தா­கக் கூறு­கி­றார்.

அண்­மை­யில் ஷ்ரு­திக்கு உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஒரு தக­வல் வெளி­யா­னது. ஹார்­மோன் குறை­பா­டு­க­ளால் அவர் உடல்நலம் குன்­றி­யி­ருப்­ப­தா­கக் கூறப்­பட்­டது.

இதை­ய­டுத்து ஏரா­ள­மான ரசி­கர்­கள் அவ­ருக்கு ஆறு­தல் கூறும் வித­மாக சமூக ஊட­கங்­களில் பதி­விட்­ட­னர். இத­னால் தாம் மனம் நெகிழ்ந்து போன­தா­க­வும் தாம் நல்ல உடல்நலத்­து­டன் இருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தி­ருந்­தார்.

ஷ்ருதி ஹாசன் தற்போது பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'சலார்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், சிரஞ்சீவி நடிக்கும் 'வால்டர் வீரய்யா' என்ற படத்திலும் மூத்த நடிகர் பாலகிருஷ்ணாவின் ஜோடியாகவும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

அவர் மூத்த நடிகர்களுடன் நடிப்பது குறித்து சில விமர்சனங்கள் எழுந்தன. எனினும் அவை குறித்து தாம் கவலைப்படுவது இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளார் ஷ்ருதி.

"ஒரு படத்தின், கதை, திரைக்கதை, எனக்கான பாத்திரத்தின் தன்மை குறித்து மட்டுமே கவனம் செலுத்துவேன். நடிப்பு என்று வந்தபிறகு நமக்குள்ள கடமையை நிறைவேற்றத் தவறக்கூடாது," என்கிறார் ஷ்ருதி ஹாசன்.