ரசிகர்களால் 'தல' எனச் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித் குமார் திருச்சி நகரில் காணப்பட்டுள்ளார்.
'திருச்சி ரைஃபல் கிளப்' எனும் அந்நகரின் துப்பாக்கிச் சூட்டு நிலையத்தில் அவர் காணப்பட்டார்.
நடிப்புக்கு அப்பால் வாகனப் பந்தயம், துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவற்றில் அஜித்துக்கு அதிக நாட்டம் உள்ளது பலருக்குத் தெரிந்ததே.
தற்போது ஹெச். வினோத்தின் இயக்கத்தில் 'ஏகே61' என்றழைக்கப்படும் இன்னும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கிறார்.
'ஏகே61' வரும் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

