அறிமுக இயக்குநர் ஹரிஹரன் கதை, திரைக்கதை எழுதி, இயக்கி உள்ள படம் 'இனி ஒரு காதல் செய்வோம்'. அஜய் பாலகிருஷ்ணா, ஸ்வேதா இருவரும் நாயகன், நாயகியாக அறிமுகமாகின்றனர்.
1990களில் பிறந்தவர்களின் கல்லூரி வாழ்க்கை, நட்பு, காதல், பிரிவு ஆகியவற்றை விவரிக்கும் விதமாக உருவாகி உள்ளது இப்படம். முழுக்க முழுக்க காதல் சம்பவங்களுடனும் நகைச்சுவையுடனும் காட்சிகள் கலகலப்பாக இருக்கும்," என்கிறார் இயக்குநர்.
படத்தின் முன்னோட்டம், பாடல்களை அடுத்த மாதம் வெளியிடவும், திரைப்படத்தை வரும் கிறிஸ்மஸ் விடுமுறையில் வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.
பெண் இசையமைப்பாளர் ரேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் விஜய் சேதுபதி தயாரித்த முகில் படத்துக்கு இசையமைத்தவர். '96' பட புகழ் கார்த்திக் நேத்தா படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

