'இது அண்ணன்களின் கதை'

'இது அண்ணன்களின் கதை'

3 mins read

"நிறைய கலை­ஞர்­க­ளு­டன் கூட்­டணி அமைத்து 'காஃபி வித் காதல்' படத்தை உரு­வாக்கி வரு­கி­றார் சுந்­தர்.சி.

மூன்று சகோ­தரர்­கள், அவர்­க­ளு­டன் தொடர்­புள்ள உற­வு­கள், அவர்­க­ளின் காதல், அவற்­றின் வெற்றி, தோல்வி போன்ற பிரச்­சி­னை­களை எல்­லாம் ரசி­கர்­கள் புன்­ன­கை­யோடு திரை­யில் பார்க்­க­லாம்," என்­கி­றார் சுந்­தர்.சி.

முத­லில் 'நலம் வாழ' என்­று­தான் படத்­துக்கு தலைப்பு வைத்­தா­ராம். மிக­வும் மென்­மை­யாக இருப்­ப­தாக சிலர் கூறவே 'காஃபி வித் காதல்' என்று தலைப்பை மாற்றி உள்­ளார்.

"சிலர் சாதி, சமு­தா­யம் என்று கதைக்­க­ருவை தேர்ந்­தெ­டுப்­பார்­கள். நானும் எல்­லா­வி­த­மான கதைக்­க­ருக்­க­ளை­யும் பார்த்­து­விட்­டேன். எனது படங்­களில் நகைச்­சுவை கொஞ்­சம் அதி­க­மாக இருப்­ப­தால் 'நகைச்­சுவை பட இயக்­கு­நர்' என்று முத்­திரை குத்­தி­விட்­ட­னர்.

"எனக்கு நடி­கர்­கள் ஜீவா, ஜெய்­யு­டன் எப்­போ­துமே ஒத்­துப்­போ­கும். என்­னு­டன் பணி­யாற்ற வேண்­டும் என்­றால் மிக­வும் துடிப்­பாக இருப்­பார்­கள். இவர்­க­ளுக்கு அண்­ண­னாக ஸ்ரீகாந்த் நடித்­துள்­ளார். குடும்ப உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளிப்­ப­வர். அதே­ச­ம­யம் கொஞ்­சம் சபல புத்தி உள்­ள­வர். இது­வரை ஸ்ரீகாந்­து­டன் பணி­யாற்­றி­ய­தில்லை. ஆனால் இந்­தப் படத்­தின் மூலம் உற்­சா­க­மாக ஒரு குழு­வாக இணைந்­து­விட்­டோம்.

"மாள­விகா சர்மா, அம்­ரித்தா ஐயர், பிக்­பாஸ் சம்­யுக்தா, ஐஸ்­வர்யா தத்தா, ரைசா வில்­சன் என்று நிறைய நாய­கி­கள். அனை­வ­ருமே முதல் இடத்­திற்­குப் போகத் தகு­தி­யுள்ள பெண்­கள்­தான். மூன்று அண்­ணன்­க­ளுக்­கு­மான பாச­முள்ள தங்­கை­யாக திவ்­ய­தர்­ஷினி நடித்­துள்­ளார். இந்­தப் படத்­தின் ஆதா­ரமே அவர்­தான் என­லாம்.

"ஒவ்­வொரு சகோ­த­ர­ருக்­கும் கிளைக்­கதை இருக்­கும். அதே­போல் யோகி­பாபு சம்­பந்­தப்­பட்ட நகைச்­சுவை காட்­சி­க­ளுக்­கும் ஒரு பகுதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது," என்­கி­றார் சுந்­தர்.சி.

கடைக்­கோடி ரசி­கர்­கள் வரை பார்த்து ரசிக்­கும் வகை­யில் நல்ல படத்தை உரு­வாக்கி இருப்­ப­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், இது­போன்ற காதல் கதை­களை ரசி­கர்­கள் நிச்­ச­யம் வர­வேற்­பார்­கள் என்­கி­றார்.

"ஒரு படத்­தில் நகைச்­சுவை, குடும்ப உணர்­வு­கள் என எல்­லாமே அள­வோடு இருக்க வேண்­டும். நான் எப்­போ­துமே கதை, திரைக்­கதை, வச­னங்­கள் ஆகி­ய­வற்­றுக்­காக முன்­கூட்­டியே நன்கு உழைப்­பேன். இத­னால் படப்­பி­டிப்­புக்­குச் செல்­லும்­போது தேவை­யற்ற குழப்­பம் இருக்­காது.

"நான் இயக்­கிய 'உள்­ளத்தை அள்­ளித் தா', 'தீயா வேலை செய்­ய­ணும் குமாரு' எல்­லாம் இப்­ப­டிப்­பட்ட படம்­தான். ஆனால் நகைச்­சுவை கொஞ்­சம் அதிகமாகி­விட்­டது. இந்­தப்­பு­திய படத்­தில் எல்­லாம் சரி விகி­தத்­தில் அமைந்­தி­ருக்­கும்," என்­கி­றார் சுந்­தர்.சி.

இந்­தப் படத்­தில் ஊட்டி நக­ரத்­தை­யும் ஒரு பாத்­தி­ர­மா­கவே காட்­சிப்­ப­டுத்தி உள்­ளா­ராம். சென்­னை­யில் ஒரு திரைப்­ப­டத்தை உரு­வாக்­கக்­கூ­டிய சூழ்­நிலை இல்லை என்­றும் அதற்­கான அனு­ம­தி­யைப் பெறு­வது மிகச் சிர­ம­மான விஷ­யம் என்­றும் சொல்­கி­றார்.

"கடந்த வாரம் சென்­னை­யில் உள்ள என் சொந்த வீட்­டில் படப்­பி­டிப்பை நடத்­தி­னோம். ஆனால் அதே பகு­தி­யைச் சேர்ந்த யாரோ புகார் கொடுத்­துள்­ள­னர். உடனே காவல்­துறை என் வீடு தேடி வந்­து­விட்­டது.

"இப்­படி ஏதா­வது பஞ்­சா­யத்து இருக்­கும் என்­ப­தால்­தான் சென்­னையே வேண்­டாம் என முடி­வெ­டுத்­து­விட்­டேன். ஹைத­ரா­பாத், ஊட்டி என்று போய்­விட்­டால் பிரச்­சி­னையே இருக்­காது. அது மட்­டு­மல்ல, ஊட்டி மிக அழ­கான ஊர். எனக்­கும் அது­தான் ஒத்­துப்­போ­கிறது.

'காஃபி வித் காதல்' படத்­துக்­கும் இசை­ய­மைக்­கி­றார் யுவன் சங்­கர் ராஜா. அவ­ரும் சுந்­தர்.சி.யும் இணைந்து பணி­யாற்றி 18 ஆண்­டு­கள் ஆகின்­றன. ஆனால் இடை­வெளி ஏற்­பட்­டதே தெரி­ய­வில்லை என்­றும் விட்ட இடத்­தி­லி­ருந்து தொடர்­வது போன்று உணர்­வ­தா­க­வும் சொல்­கி­றார்.

"முன்பு எப்­படி இருந்­தாரோ, அதே­போன்­று­தான் இருக்­கி­றார். எதற்­கெ­டுத்­தா­லும் சிரிப்­பு­தான். இன்­னும் பாடல் வர­வில்­லையே என்று நான் பதற்­ற­மா­கக் கேட்­டால், 'நாளைக்கு வாங்­கிக் கொள்­ளுங்­கள்' என்று சாந்­தமா பதில் வரும். எதற்­கும் 'முடி­யாது' சொன்­னது கிடை­யாது.

"எனக்கு கமல் படத்­தில் இடம்­பெற்­றுள்ள 'ரம்­பம்­பம்' பாடல் ரொம்­பப் பிடிக்­கும். அதை ரீமிக்ஸ் செய்­தால் நன்­றாக இருக்­கும் என்று அவ்­வப்­போது நினைப்­பேன். அந்த ஆசை இந்­தப் படத்­தின் மூலம் நிறை­வேறி உள்­ளது.

"இந்­தப் பாட­லைப் பட­மாக்­கும்­போது யுவ­னும் படப்­பி­டிப்பு வந்­தார். இந்­தப் படத்­தில் அவர் இருப்­பது பளிச் என்று தெரி­யும்," என்­கி­றார் இயக்குநர் சுந்­தர்.சி.

, :

  