ஐஸ்வர்யா ராஜேஷ், சம்யுக்தா, ஜனனி ஆகிய மூன்று நடிகைகளும் நெருங்கிய கூட்டாளிகளாம். மூவருமாகச் சேர்ந்து பாரீஸ் நகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா. ஐஸ்கிரீம் சாப்பிடுவது, பூங்காக்க ளில் வலம் வருவது என ஏகப்பட்ட புகைப்படங்களைக் கண்ட ரசிகர்கள், மூவரும் அழகாக இருப்பதாகப் பின்னூட்டமிட்டுள்ள னர். இந்த நட்பு நீடிக்கவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் செப்டம்பர் இறுதிக்குள் முடிந்து விடும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த இரண்டாம் கட்டப் படப் படிப்பை முடித்துள்ளனர். இதையடுத்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பை சென்னையில் நடத்த உள்ளனராம்.

