தங்கர் பச்சான் இயக்கும் படத்திற்கு 'கருமேகங்கள் கலைகின்றன' என பெயரிட்டுள்ளனர். இதில் முதன்மை வேடத்தில் யோகி பாபு, மம்தா மோகன்தாஸ் நடிக்கின்றனர்.
இவர்களுடன் பாரதிராஜா, கவுதம் மேனன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை, ராமேசுவரம் பகுதிகளிலும்்் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்தப்படமும் தங்கர் பச்சானின் சிறுகதையைத் தழுவி உருவாக்கப்படுகிறது.
சிறிதும் சமரசம் செய்துகொள்ளாத தனது பாணியிலான வெகு இயல்பான வாழ்வியலைச் சொல்லும் படைப்பாக இந்தப் படம் இருக்கும் என்கிறார் தங்கர்பச்சான்.
கண்மணி எனும் கதைப் பாத்திரத்திற்காக இந்தியாவிலுள்ள பல நடிகைகளிடம் நடிப்புத் தேர்வு நடத்திய பின் மம்தா மோகன்தாஸ் தேர்வாகி இருக்கிறார். கதை நாயகியாக தாம் நடிப்பதைப் பெருமையாக கருதுவதாக மம்தா மோகன்தாஸ் கூறுகிறார்.

