ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட ராஷ்மிகா

ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட ராஷ்மிகா

1 mins read
177dc758-9603-4a0d-b913-e36ddee2ba21
-

தாம் நடிக்­கும் படங்­க­ளின் விளம்­பர நிகழ்­வு­களில் பங்­கேற்­ப­தில்லை என்ற புகார் தொடர்­பாக ரசி­கர்­கள் எழுப்­பி­யுள்ள கேள்­விக்­குப் பதி­ல­ளித்­துள்ள ராஷ்­மிகா, அதற்­காக மன்­னிப்பு கோரி­யுள்­ளார்.

இனி அவ்­வாறு நடக்­காது என்­றும் தெரி­வித்­துள்­ளார்.

தற்­போது விஜய்­யு­டன் வாரிசு படத்­தில் நடித்து வரும் ராஷ்­மிகா மந்­தனா, தெலுங்கு, இந்தி என பல மொழிப் படங்­களில் அடுத்­த­டுத்து ஒப்­பந்­த­மாகி வரு­கி­றார். இதன் கார­ண­மா­கவே தம்­மால் விளம்­பர நிகழ்­வு­களில் பங்­கேற்க முடி­ய­வில்லை என்­கி­றார்.

"இப்­போது தமிழ், தெலுங்­கில் பல படங்­களில் நடித்து வரு­வ­தால் இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு என சென்­னை­யில் நடக்­கும் எனது படங்­க­ளின் நிகழ்ச்­சி­களில் என்­னைத் தொடர்ந்து பார்க்­கப் போகி­றீர்­கள். நான் சொல்­வதை நம்­புங்­கள்," என்று சமூக ஊட­கத்­தில் பதி­விட்­டுள்­ளார் ராஷ்­மிகா.