ஆலியா: நான் எதிலும் தனித்து முடிவெடுப்பேன்

ஆலியா: நான் எதிலும் தனித்து முடிவெடுப்பேன்

3 mins read

ஒரு பெண்­ணின் ஒவ்­வொரு செய­லும் தலைப்­புச் செய்­தி­யாக வந்து விடு­கிறது என்­றும் எந்­த­வொரு விஷ­யத்­தி­லும் ஒரு பெண்­ணின் விருப்­பம் என்ன என்­பதை அறிய சமூ­கம் ஆவ­லாக உள்­ளது என்­றும் கூறு­கி­றார் ஆலியா பட்.

நடி­கர் ரன்­பீர் கபூ­ரும் இவ­ரும் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளா­கக் காத­லித்து வந்­த­னர். இந்­நி­லை­யில் அன்­பர் தின­மான பிப்­ர­வரி 14ஆம் தேதி­யன்று இரு­வ­ருக்­கும் திரு­ம­ணம் நடை­பெற்­றது.

அண்­மை­யில் தாம் தாய்மை அடைந்­துள்ள தக­வலை வெளி­யிட்ட ஆலியா, தற்­போது ஹாலி­வுட்­டில் கால் பதித்­துள்­ளார். அவர் நடித்து வரும் 'ஹார்ட் ஆப் ஸ்டோன்' படம் வேக­மாக வளர்ந்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், திரைத்­து­றை­யில் நல்ல வாய்ப்­பு­கள் கிடைத்து வரும்­போது, இவ்­வ­ளவு இளம் வய­தி­லேயே குழந்தை பெற்­றுக்­கொள்ள வேண்­டுமா என்று சிலர் கேட்­கின்­ற­ன­ராம். அவர்­க­ளுக்­காக பேட்டி ஒன்­றில் விளக்­கம் அளித்­துள்­ளார் ஆலியா.

"நான் இள­மை­யி­லேயே தாயா­கி­றேன் என்­பது சரி­தான். ஆனால், இத­னால் வேறு ஏதே­னும் மாற போகி­றதா?

"எனது தொழில் சார்ந்த வாழ்க்­கையை, ஒரு குடும்­பமோ அல்­லது ஒரு குழந்­தையோ ஏன் மாற்ற போகிறது? அவை முற்­றி­லும் இரண்டு வேறு­பட்ட விஷ­யங்­கள்.

"முட்­டாள்­த­னம் வாய்ந்த விஷ­யத்­தில் கூடு­த­லாக கவ­னம் செலுத்­து­ வ­தற்­குப் பதி­லாக, ஓர் எடுத்­துக்­காட்­டாக இருக்க விரும்­பு­கி­றேன்," என்­பதே ஆலி­யா­வின் விளக்­கம்.

இது­போன்ற எண்­ணங்­க­ளைக் கொண்­டி­ருப்­ப­வர்­கள், வாழ்க்­கை­யில் தற்­போது எங்கு, எப்­படி இருக்­கி­றார்­கள் என்­ப­தைத்­தான் அவர்­க­ளு­டைய வாதங்­கள் எடுத்­துக் காட்­டு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், தாம் அத்­த­கைய கவ­லை­கள் எதை­யும் கொண்­டி­ருக்­க­வில்லை என்­கி­றார்.

"எனது வாழ்­வில் நான் எடுத்த பல முடி­வு­கள் என்­னால் தனித்தே எடுக்­கப்­பட்­டுள்­ளன. அதற்­கும் என்­னைச் சுற்­றி­யுள்ள எவ­ருக்­கும் எந்­த­வி­த­மான தொடர்­பும் கிடை­யாது. பொது­வாக நான் பெரிய விச­ஷ­யங்­களை திட்­ட­மி­டு­வதே இல்லை. என்­னைப் பொறுத்­த­வரை அவை எல்­லாம் இயல்­பா­கவே நடக்­கும்.

"என் உள்­ளு­ணர்வு என்ன கூறு­கி­றதோ அதனை பின்­பற்­றவே விரும்­பு­கி­றேன். எனது உள்­ளு­ணர்­வும் துணிச்­ச­லும்­தான் என்னை வழி­ந­டத்­து­கின்­றன. எனது தொழில் சார்ந்த, தனிப்­பட்ட வாழ்க்­கை­யில் இந்த அடிப்­ப­டை­யில்­தான் முடி­வு­களை எடுக்­கி­றேன். இத­னால், பல விஷ­யங்­கள் மிக அழ­கா­க­வும் எனது எதிர்­பார்ப்­பு­க­ளின்­ப­டி­யும் நடந்­துள்­ளன," என்­கி­றார் ஆலியா பட்.

பல்­வேறு தளங்­களில் தமக்கு முன்­பின் அறி­மு­கம் இல்­லாத பலர் தமக்கு ஆத­ரவு அளித்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், இதன் மூலம் சமூ­கத்­தில் எவ்­வ­ளவு பெரிய மாற்­றங்­கள் நிகழ்ந்­துள்­ளன என்­பதை தம்­மால் புரிந்­து­கொள்ள முடி­கிறது என்­கி­றார்.

"இது­கு­றித்த விழிப்­பு­ணர்வு என்­னுள் ஏற்­பட்­டுள்­ளது. நாம் இப்­போது 2022ஆம் ஆண்­டில் இருக்­கி­றோம். அத­னால் மக்­கள் பல கேள்­வி­க­ளைக் கேட்­கின்­ற­னர். என்­னைப் பற்­றிய சில கட்­டு­ரை­கள், செய்­தி­கள் தொடர்­பாக மக்­கள் தங்­கள் எதிர்ப்­பை­யும் கோபத்­தை­யும் பதிவு செய்­துள்­ள­னர். 'ஆலியா மீது உங்­க­ளுக்கு என்ன கோபம்... அவரை அவ­ரா­கவே இருக்க விடுங்­கள்' என பதி­விட்டு உள்­ள­னர்.

"இது தானா­கவே நடக்­கிறது. சமூக மாற்­றங்­களும் இவ்­வாறு இயல்­பா­கவே நடந்­தே­று­வ­தாக நான் உணர்­கி­றேன்," என்­கி­றார் ஆலியா.

ஆகக் கடை­சி­யாக பாலி­யல் தொழி­லில் தள்­ளப்­படும் பெண் ஒரு­வர் எதிர்­கொள்­ளும் வாழ்­வி­யல் சார்ந்த சவால்­களை விளக்­கும் 'கங்­கு­பாய் கத்­தி­யா­வடி' என்ற படத்­தில் நடித்து ரசி­கர்­க­ளின் பாராட்­டு­க­ளைப் பெற்ற இவர், 'ஆர்­ஆர்­ஆர்' படத்­தில் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்து அசத்தி இருந்­தார்.

தற்­போது 'பிரம்­மஸ்­திரா 1 சிவா' என்ற படத்­தில் நடி­கர் ரன்­பீர் கபூ­ரு­டன் இணைந்து நடித்து வரு­கி­றார். மேலும் 'டார்­லிங்ஸ்' என்ற படம் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி ஓடிடி தளத்­தில்­ வெ­ளி­யா­கிறது.

இதில் ஆலி­யா­வு­டன், ஷெபாலி ஷா, விஜய் வர்மா மற்­றும் ரோஷன் மேத்யூ உள்­ளிட்­டோர் நடித்­துள்­ள­னர்.

, :

  