கன்னடப் படத்துக்காக சண்டைக்காட்சி படமாக்கப் பட்டபோது, கீழே விழுந்ததில்
காயமடைந்துள்ளார் சம்யுக்தா
ஹெக்டே. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு காலில் தசை பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். எனவே சில நாள்கள் ஓய்வில் இருப்பாராம். அவர், மருத்துவ மனையில் காலில் கட்டு போடப் பட்ட நிலையில் கட்டிலில் படுத்தி ருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'விருமன்'. இதில் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி நாயகியாக நடித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி இப்படம் வெளியீடு காணும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் மாற்றம் செய்து, ஆகஸ்ட் 12ஆம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
'திருமணத்துக்குப் பின்னர் கணவர் நாக சைதன்யாவுடன் ஹைதராபாத் அடுக்குமாடிக்
குடியிருப்பில் உள்ள வீட்டில் வசித்து வந்தார் சமந்தா.
இருவரும் பிரிந்த பின்னர் அந்த வீட்டை விற்றுவிட்டனர். இந்நிலையில், அதே வீட்டை மீண்டும் வாங்கியுள்ளார் சமந்தா. முன்னதாக அந்த வீட்டை வாங்கியவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதிக தொகை தந்துள் ளது சமந்தா தரப்பு. தற்போது அந்த வீட்டில் தனது தாயாருடன் அவர் வசித்து வருகிறார்.
தொழிலதிபரான சரவணன் அருள் நடிக்க, இரட்டை இயக்கு நர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கி உள்ள தி லெஜண்ட் திரைப்படம் முதல் நாளன்று உலகம் முழு வதும் ஏழு கோடி ரூபாய் மட் டுமே வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சி களுக்காக மட்டுமே பல கோடி வாரி இறைத்துள்ளனர்.
வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள படம் 'எண்ணித் துணிக'. வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி இப்படம் திரையரங்கு களில் வெளியாக உள்ளது. இதில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்க, சாம் சி.எஸ் இசைய மைத்துள்ளார். ஜெய் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாக உள்ளன.

