'தனுஷை பலவிதமாக அசிங்கப்படுத்தினர்'

'தனுஷை பலவிதமாக அசிங்கப்படுத்தினர்'

1 mins read

பல்­வேறு கடு­மை­யான விமர்­ச­னங்­கள், சிர­மங்­க­ளைக் கடந்து வந்த பிறகே தனுஷ் இன்­றுள்ள நிலையை எட்­டிப்­பி­டித்­துள்­ள­தாக அவ­ரது தந்தை கஸ்­தூரி ராஜா தெரி­வித்­துள்­ளார்.

இதே­போல் ஆரம்ப காலத்­தில் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளுக்கு ஆளான பிறகே நடி­கர் விஜய்­கூட இன்று முன்­னணி நடி­கர் என்­கிற இடத்தை பிடித்­துள்­ளார் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

தனது மக­னின் திரை­யு­ல­கப் பய­ணம் குறித்து கஸ்­தூரி ராஜா பேசும் காட்சி அடங்­கிய காணொ­ளிப் பதிவு ஒன்று சமூக ஊட­கங்­களில் வெளி­யாகி உள்­ளது. இதை தனுஷ் ரசி­கர்­கள் பர­வ­லா­கப் பகிர்ந்து வரு­கின்­ற­னர்.

"வாழ்க்­கை­யின் தொடக்­கத்­தில் வரும் சோத­னை­க­ளை, வலி­க­ளை­கண்டு பயந்து ஓடா­மல் நின்று போரா­டி­னால் வெற்றி என்­பது தன்­வ­சப்­படும் என்­ப­தற்கு தனுஷ், விஜய் நல்ல எடுத்­துக்காட்டு.

"தனுஷ் என்னைவிட மிக­வும் கஷ்­டப்­பட்­டுள்­ளார். அவ­ரு­டன் ஒப்­பி­டும்­போது, நான் சினி­மா­வில் பெரி­தாக கஷ்­டப்­ப­ட­வில்லை என்­பேன். 'துள்­ளு­வதோ இளமை' படத்தை பிர­பல விநி­யோ­கஸ்­தர் ஒரு­வ­ருக்கு திரை­யிட்­டுக் காட்­டி­னேன். படம் முடிந்த பிறகு எல்­லோ­ரும் இருந்­த­னர் அவரை மட்­டும் காண­வில்லை.

"பின்னர் தொலைபேசி வழி தொடர்புகொண்டு கேட்டதற்கு. 'நம்ப பையன் நடித்த படம் என்பதால் நம் கண்களுக்கு அழகாத்தான் தெரிவான். ஆனால் காசு கொடுத்து படம் பார்ப்பவர்களுக்கு அழகாக தெரிய வேண்டும் இல்லையா... எனக்கு அப்படித் தெரியவில்லை' என கூறி அசிங்கப்படுத்தினார். ஆனால் தனுஷ் இன்று சாதித்துக் காட்டி உள்ளார்," என்று கஸ்தூரி ராஜா மேலும் தெரிவித்துள்ளார்.