காதல் வலையில் விஜய், ராஷ்மிகா

காதல் வலையில் விஜய், ராஷ்மிகா

1 mins read

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாக வெளியான செய்தியை இருவரும் ஏற்கவோ மறுக்கவோ இல்லை.

இந்நிலையில் நடிகை அனன்யா பாண்டே அவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விஜய் தேவரகொண்டாவுடன் பங்கேற்றார் அனன்யா. அப்போது ஒரு கேள்விக்குப் பதிலளித்த அவர், மேற்குறிப்பிட்ட காதல் விவகாரம் உண்மைதான் என்று மறைமுகமாகக் குறிப்பிட்டார்.

இதையடுத்து விளக்கம் அளித்த விஜய், ராஷ்மிகா தமது நல்ல நண்பர் என்றார்.

"இருவரும் இரண்டு படங்களில் நடித்துள்ளோம். அவர் என் அன்புக்குரியவர். அவரை மிகவும் நேசிக்கிறேன்," என்றார் விஜய் தேவரகொண்டா.