திகில் கதையில் விஜய் சேதுபதி

திகில் கதையில் விஜய் சேதுபதி

1 mins read

பல்வேறு வித்தியாசமான கதைக்களங்கள், கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, அடுத்து ஒரு திகில் படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்தப் படத்தை வினோத் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. மேலும், இந்தியில் 'மெர்ரி கிறிஸ்துமஸ்', 'மும்பைக்கார்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சேதுபதிக் காக வித்தியாசமான திகில் கதையை உருவாக்கி உள்ளாராம் வினோத்.