'கர்வம் உள்ள தமிழ்ப்பெண்'

'கர்வம் உள்ள தமிழ்ப்பெண்'

3 mins read
a918da9d-bcc0-428f-a1c7-b166390676d1
-

தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­கள், இணை­யத்­தொ­டர்­கள், சமூக ஊட­கங்­களில் ஆதிக்­கம் செலுத்­தும் செயல்­பாட்­டா­ளர் எனப் பன்­மு­கங்­க­ளைக் கொண்­டுள்­ளார் அம்மு அபி­ராமி.

'அசு­ரன்' படத்­துக்­காக சிறந்த குணச்­சித்­திர நடி­கைக்­கான விரு­தைப் பெற்­றுச் சாதித்­த­வர்.

தற்­போது பேட்­டரி படத்­தில் நடித்­துள்­ளார்.

"இது மருத்­து­த்து­றை­யில் உள்ள சில பிரச்­சி­னை­களை சுட்­டிக்­காட்­டும் படைப்பு. முழு­நீள மருத்­துவ திகில் கதை என­லாம். தமிழ் ரசி­கர்­க­ளுக்கு முற்­றி­லும் மாறு­பட்ட கதைக்­க­ள­மாக இருக்­கும்.

"இயக்­கு­நர் மணி­பா­ரதி வெறும் நாய­கி­யாக பாடல் காட்­சி­களில் மட்­டும் என்­னைப் பயன்­ப­டுத்­தா­மல், கன­மான கதா­பா­த்­தி­ரத்தை அளித்­துள்­ளார். அதே­ச­ம­யம் நல்ல பாடல்­களும் உள்­ளன.

படத்­தின் இறு­திப்­ப­குதி வரை எனது கதா­பாத்­தி­ரத்­துக்கு உரிய முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­பட்­ட­தால், என் நடிப்­புத் திற­மையை நல்ல முறை­யில் வெளிப்­ப­டுத்த முடிந்­தது. இந்தக் கால­கட்­டத்­துக்கு மிகத் தேவை­யான ஒரு படமாக இருக்­கும்," என்­கி­றார் அம்மு அபி­ராமி.

ஒரு பார்­வை­யா­ள­ராக இருந்­து­தான் கதை கேட்­பா­ராம். இது­வரை தமக்கு அமைந்த எல்லா கதை­களும் கதா­பாத்­தி­ரங்­க­ளுமே நல்ல பெயர் வாங்­கிக் கொடுத்­தி­ருப்­ப­தா­கக் கூறு­கி­றார்.

எனி­னும் பல படங்­களில் இவ­ரது கதா­பாத்­தி­ரம் இறந்­து­வி­டு­வ­தாக அமை­வது ஏன் என்று பல ரசி­கர்­கள் கேள்வி எழுப்பி உள்­ள­ன­ராம்.

"ஒரு­வ­கை­யில் ரசி­கர்­கள் இவ்­வாறு கேட்­பது சரி­தான். பல படங்­களில் நான் இறந்­து­வி­டு­வ­தாக காட்சி அமைக்­கப்­பட்­டுள்­ளது. அத­னால்­தான் இப்­போதெல்­லாம் கதை கேட்­கும்­போதே 'நான் இந்­தப் படத்­திலே சாக மாட்­டேன் அல்­லவா' என்று கேட்­டுத் தெளி­வு­ப­டுத்­திக் கொள்­கி­றேன்," என்று சொல்­லும் அபி­ரா­மி தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­க­ளைத் தொகுத்து வழங்­கும் பணி­யில்­தான் மிகுந்த ஆர்­வம் கொண்­டி­ருந்­தா­ராம்.

அதற்­கான முயற்­சி­யில் ஈடு­பட்­ட­போ­து­தான், நடி­கை­யாக வேண்­டும் என்­றும் ஆசைப்­பட்­டுள்­ளார். எனி­னும் ஒரு விஷ­யத்தை அடைய வேண்­டும் என்­றால் மற்­றொன்றை இழக்க வேண்­டும் என்­ப­தற்­கேற்ப, சினிமா வாய்ப்­புக்­காக தொலைக்­காட்­சி­யில் தோன்று­வ­தற்­கான முயற்­சி­க­ளைக் கைவிட்­டுள்­ளார்.

"அது மட்­டு­மல்ல, நண்­பர்­க­ளு­டன் விளை­யா­டும் நேரம் குறைந்­து­போ­னது. என் வய­துக்­குப் பொருத்­த­மில்­லாத வகை­யில் பள்ளி மாணவி, பதின்ம வய­துப் பெண்­ணாக நடிப்­ப­தற்­கான வாய்ப்­பு­கள்­தான் அதிக எண்­ணிக்­கை­யில் தேடி வரு­கின்­ற­ன. எனக்கு இரு­பத்து இரண்டு வய­தா­கி­விட்­டது. இதைச் சொன்­னால் யாரும் நம்­பு­வ­தாக இல்லை.

"அதே சம­யம் என்­னு­டன் நடிக்­கும் பலர் என்னை இன்­னும் சின்­னப் பெண்­ணா­கவே நினைத்து பாசம் காட்­டு­வார்­கள். எப்­படி நடிக்க வேண்­டும் என்று கற்­றுக்­கொ­டுத்து உத­வு­கி­றார்­கள்," என்­கி­றார் அம்மு அபி­ராமி.

தமிழ் தெரிந்த நடி­கை­களில் அம்­மு­வும் ஒரு­வர். மொழி தெரிந்து நடிப்­ப­தால் கதா­பாத்­தி­ரத்­து­டன் தம்­மால் எளி­தில் பொருந்­திப்­போக முடி­கிறது என்­கி­றார்.

"இத்­தனை படங்­களில், சிறப்­பான கதா­பாத்­தி­ரங்­கள் தொடர்ந்து அமை­கிறது என்­றால் அதற்கு நான் தமிழ் தெரிந்த பெண் என்­ப­து­தான் கார­ணம்.

மேலும் விருது பெறும் அள­வுக்கு நான் முன்­னேறி வந்­தி­ருப்­ப­தற்­கும் தமிழ்­தான் கார­ணம் என்­பதை உறு­தி­யா­கச் சொல்ல முடி­யும்.

"அது­மட்­டு­மல்ல, இயல்­பா­கவே தமிழ்ப் பெண் என்­கிற கர்­வம் எனக்கு எப்­போ­தும் உண்டு," என்று சொல்­லும் அம்மு அபி­ராமி, 'பேட்­டரி' பட வெளி­யீட்­டுக்­கா­கக் காத்­தி­ருக்­கி­றார்.

மேலும் 'கோலி சோடா 2.0' இணை­யத் தொட­ரில் நடித்து வரு­ப­வர், இரண்டு நகைச்­சு­வைப் படங்­க­ளி­லும் ஒப்­பந்­த­மாகி உள்­ளார். மேலும் சில படங்களில் நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றனவாம்.

"தமிழ்ப் படங்­களில் மட்­டு­மல்­லா­மல் மற்ற மொழி­க­ளி­லும் எனக்­கான வாய்ப்­பு­கள் பல தேடி வரு­கின்­றன. அவற்­றி­லும் கவ­னம் செலுத்த விரும்­பு­கி­றேன்," என்­கி­றார் அம்மு அபி­ராமி.

, :

  