பதக்கங்களை வாரிக்குவித்த நடிகர் அஜித் அணி

பதக்கங்களை வாரிக்குவித்த நடிகர் அஜித் அணி

1 mins read
1c454fa0-8d76-4b7a-8d1c-0e2e795bd531
-

மாநில அள­வி­லான துப்­பாக்கி சுடும் போட்­டி­யில் நடி­கர் அஜித் அணி ஆறு பதக்­கங்­களை வென்று சாதித்­துள்­ளது. இவற்­றுள் நான்கு தங்­கம், இரண்டு வெண்­க­லப் பதக்­கங்­கள் அடங்­கும்.

பர­ப­ரப்­பான படப்­பி­டிப்­புக்கு மத்­தி­யில் கார், இரு­சக்­கர வாக­னப் போட்­டி­களில் பங்­கேற்­பது அஜித்­தின் வழக்­கம். கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக துப்­பாக்­கிச் சுடு­தல் போட்­டி­க­ளி­லும் பங்­கேற்று வரு­கி­றார். இதற்­காக அவர் முறைப்­படி பயிற்சி பெற­வும் தவ­று­வ­தில்லை.

இந்­நி­லை­யில், திருச்சி மாந­கர ஆயு­தப்­படை வளா­கத்­தில் உள்ள துப்­பாக்­கிச்­சூட்டு மையம் சார்­பில் கடந்த ஒரு­வா­ர­மாக மாநில அள­வி­லான போட்­டி­கள் நடத்­தப்­பட்­டன. இதில் அஜித்­தும் கலந்து கொண்­டார். அவ­ரது அணி சிறப்­பா­கச் செயல்­பட்டு ஆறு பதக்­கங்­களை வென்­றது.

இதன் மூலம் நான்கு தங்­கம், இரண்டு வெண்­க­லப் பதக்­கங்­க­ளைப் பெற்­றுள்­ளார் அஜித். கடந்த ஆண்­டும் இதே­போல் பதக்­கங்­க­ளைக் குவித்­தி­ருந்­தார்.