நாயகனாக அறிமுகமாகும் சரண்ராஜ் மகன்

நாயகனாக அறிமுகமாகும் சரண்ராஜ் மகன்

2 mins read
f6cfda27-6741-494a-a47c-1dd627bfad03
'குப்பன்' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் தேவ் சரண்ராஜ், சுஷ்மிதா. -

ஒரு காலத்­தில் வில்­ல­னா­க­வும் பின்­னர் குணச்­சித்­திர கதா­பாத்­தி­ரங்­க­ளி­லும் நடித்து ரசி­கர்­கள் மன­தில் இடம் பிடித்­த­வர் சரண்­ராஜ். இவ­ரது மகன் தேவ் சரண்­ராஜ்­நாய­க­னாக அறி­மு­க­மா­கும் படம் 'குப்­பன்'.

விமா­னி­யாக வேண்­டும் என விரும்­பி­யுள்­ளார் தேவ். அதற்­கான படிப்பை முடித்து, வானில் பறக்­க­வும் தயா­ராக இருந்­தா­ராம். ஆனால் கொரோனா நெருக்­க­டி­யால் ஏராளமான இளை­யர்­க­ளின் கனவு சிதைந்­தது போலவே இவ­ரும் தன் கன­வைக் கைவிட நேர்ந்­தது.

"திடீ­ரென ஒரு­நாள் என் மகன் எழுப்­பிய கேள்­வியை நான் கொஞ்­ச­மும் எதிர்­பார்க்­க­வில்லை. எவ்­வ­ளவோ பேரி­டம் பேசு­கி­றீர்­கள், பழ­கு­கி­றீர்­கள். நிறைய சினிமா அனு­ப­வ­மும் உள்­ளது.

"அப்­படி இருந்­தும் எனக்­காக ஒரு கதையை உரு­வாக்க வேண்­டும் என உங்­க­ளுக்­குத் தோன்­றவே இல்­லையா என்று தேவ் கேட்­ட­தும், அன்­றைய இரவே விடிய விடிய யோசித்து ஒரு கதையை தயார் செய்­து­விட்­டேன். அது­தான் `குப்­பன்.' இவன் விரை­வில் உங்­க­ளைச் சந்­திக்­கப் போகி­றான்," என்­கி­றார் சரண்­ராஜ்.

பல்­வேறு மொழி­களில் 600 படங்­களில் நடித்து முடித்­த­வர், இப்­போது மக­னுக்­காக மீண்­டும் கள­மி­றங்கி உள்­ளார்.

ஒரு மீன­வப் பைய­னுக்­கும் மார்­வாடி பெண்­ணுக்­கும் இடை­யி­லான கதை இது. படம் பார்த்­து­விட்டு வீடு திரும்­பும் ரசி­கர்­க­ளால் காதல் என்­பது எவ்­வ­ளவு அழ­கா­னது என்­பதை உணர முடி­யும்," என்­கி­றார் சரண்­ராஜ்.

"மீன­வர்­கள் மிக­வும் நட்­பு­ணர்­வோடு வாழ்­ப­வர்­கள். அவங்­க­ளுக்­குள் இருக்­கும் கதையே ஒரு நூறு தேறும். நான் அதில் ஆழ­மா­கப் போகா­மல், அழ­கான காதலை மட்­டும் பிரித்து கதையை உரு­வாக்கி உள்­ளேன்.

"தன்னை அண்­ணாந்து பார்க்­கிற அடித்­தட்டு மக்­களை தமிழ் சினிமா குனிந்து பார்ப்­பதே இல்லை. அப்­ப­டிப் பார்க்­கிற முயற்­சி­தான் இது. என் மகனை நாய­க­னாக நடிக்க வைத்­துள்­ளேன். விமா­னி­யா­கும் முயற்சி தாம­த­மா­ன­தால் சி­னி­மா­வுக்கு வந்­து­விட்­டார். என் மகன் என்­ப­தற்­கா­கப் பாராட்­ட­வில்லை. உண்­மை­யா­கவே நான் எதிர்­பார்த்­த­தை­விட பிர­மா­த­மாக நடித்­துள்­ளார்.

"சுஷ்­மிதா, பிரி­ய­தர்­ஷினி என இரண்டு நாய­கி­கள் அறி­மு­க­மா­கி­றார்­கள். ஆதி என்ற இன்­னொரு நாய­க­னை­யும் கார்த்தி என்­கிற வில்­ல­னை­யும் அறி­மு­கப்­ப­டுத்­து­கி­றேன். இவர்­கள் எல்­லார் மீதும் நல்ல வெளிச்­சம் விழ வாய்ப்­புள்­ளது. நிச்­ச­யம் ஒரு நல்ல கடற்­க­ரைக் காதலை திரை­யில் பார்த்த மன­நி­றைவை இந்­தப் படம் ரசி­கர்­க­ளுக்கு அளிக்கும்," என்­கி­றார் சரண்­ராஜ்.

படத்­தில் இளை­யர்­க­ளைக் கவ­ரும் அம்­சங்­கள் இருக்­கும் என்­றா­லும் யதார்த்­தத்தை மீறிய காட்சி அமைப்பு ஏதும் இருக்­காது என்று உறு­தி­யா­கச் சொல்­ப­வர், இன்­றுள்ள ரசி­கர்­க­ளின் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு ஏற்ப ஒரு படத்தை உரு­வாக்­கு­வது அவ்­வ­ளவு எளி­தல்ல என்­கி­றார்.

"சினிமா மாறி­விட்­டது. நாய­கர்­களே வில்­லன்­க­ளாக மாறும் காலம் இது. கமலே விஜய் சேது­பதி, பகத், சூர்யா என்று இளை­யர்­க­ளுக்கு இடம் கொடுத்து நடிக்­கி­றார். இவை எல்­லாம் நல்ல மாற்­றங்­கள்," என்­கி­றார் சரண்­ராஜ்.