'சீதா ராமம்' படத்துக்கு அரபு நாடுகளில் தடை

'சீதா ராமம்' படத்துக்கு அரபு நாடுகளில் தடை

2 mins read
1d3e5058-3e2c-4493-8e6d-a676deb46eac
'சீதா ராமம்' படத்தில் இடம்பெற்றுள்ள காட்சியில் துல்­கர் சல்­மான், மிரு­ணாள் தாக்­கூர். -

'குருதி ஆட்­டம்', 'பொய்க்­கால் குதிரை', 'காட்­டேரி', 'விக்டிம்' '6 ஹவர்ஸ்', 'மாயத்­திரை', 'துரி­தம்', 'கடைசி நொடி­கள்', 'சீதா ராமம்' ஆகிய ஒன்­பது திரைப்­ப­டங்­கள் இன்று (ஆகஸ்ட் 5) வெளி­யீடு காண உள்ளன.

துல்­கர் சல்­மான் நடிப்­பில் உரு­வாகி உள்ளது 'சீதா ராமம்' திரைப் படம். ஹனு ராக­வ­புடி இயக்­கி­யுள்ள இப்­படத்­தில் துல்­கர் சல்­மானின் ஜோடி­யாக ராஷ்­மிகா மந்­தனா, பாலி­வுட் நடிகை மிரு­ணாள் தாக்கூர் நடித்­துள்­ள­னர்.

தெலுங்­கில் தயா­ரா­கி­யுள்ள இப் ­ப­டம் தமிழ், மலை­யா­ளம், ஹிந்தி ஆகிய மொழி­க­ளி­லும் இன்று வெளி­யா­கிறது. ஆனால், இப்­ப­டத்­திற்கு அரபு நாடு­கள் தடை விதித்­துள்­ளன.

மத உணர்வுகளைப் புண்படுத் தும் கருத்துகள் 'சீதா ராமம்' படத்­தில் இடம்பெற்­றுள்­ளதாகக் கூறி பஹ்­ரைன், குவைத், ஓமன், கத்­தார், சவுதி அரே­பியா, ஐக்­கிய அரபு நாடு­கள் படத்­திற்குத் தடை விதித்­துள்­ளன.

அரபு நாடு­களில் மலை­யாள நடி­கர்­க­ளுக்குத் தனி வர­வேற்பு உண்டு. அங்கு லட்­சக்­க­ணக்­கான மலை­யா­ளி­கள் வசித்து வரு­வதால், அங்கு இப்படம் வெளி­யா­கா­மல் போனால் வசூ­லில் பாதிப்பு ஏற்­பட வாய்ப்­புள்­ளதாகக் கூறப்படு கிறது.

இப்படத்தில் ராணுவ அதி காரியாக ராம் என்ற பாத்திரத்தில் துல்கரும் சீதாவாக மிருணாள் தாகூரும் நடித்துள்ளனர்.

கவுதம் மேனன், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், பூமிகா உள்ளிட்டோரும் உள்ளனர்.

பாகுபலி நாயகன் பிரபாஸ் இப்படத்தின் சிறப்பு முன்னோட்டக் காட்சி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

படம் குறித்து, நடிகர் பிரபாஸ் பேசியபோது, "சினிமாக்காரனுக்கு திரையரங்குதான் கோயில் போன்றது. என்னதான் வீட்டில் பூஜை அறை இருந்தாலும், கோயி லில் கூட்டம் குறைகிறதா என்ன? திரையரங்குக்கு வந்து படத்தைப் பார்ப்பதுதான் சினிமாவை எப்போதும் வாழவைக்கும். 'சீதா ராமம்' அப்படியொரு படம். இந்தப் படத்தை திரையரங்குக்குச் சென்று தான் பார்க்கவேண்டும்," என கேட்டுக்கொண்டார்.