'நான் தவறு செய்துவிட்டேன்'

'நான் தவறு செய்துவிட்டேன்'

3 mins read
dd7462bc-7209-472e-98a8-53515492b6cb
-

சினி­மா­வில் பொறுமை என்­பது மிக­வும் முக்­கி­யம் என்­பர். அதற்கு அதர்வா மிகச்­சி­றந்த உதா­ர­ணம் என­லாம்.

'செம போதை ஆகாதே', 'பூம­ராங்', 'தள்­ளிப் போகாதே', 'குருதி ஆட்­டம்' என்று இவர் நடித்த படங்­களில் பல வெளி­யீட்டு தேதி அறி­விக்­கப்­பட்டு, பிறகு ஒத்தி வைக்­கப்­பட்­டவை. சில படங்­கள் எதிர்­மறை விமர்­ச­னங்­க­ளைப் பெற்­ற­போ­தி­லும் வசூ­லில் தயா­ரிப்­பா­ள­ருக்கு ஏமாற்­றத்­தைத் தந்­த­தில்லை.

இந்­நி­லை­யில் அண்­மைய பேட்­டி­யில் மனம்­தி­றந்து பேசி­யுள்­ளார் அதர்வா. மிகப்­பெ­ரிய வெற்­றிப் படத்தை கொடுத்­த­தில்லை என்­றா­லும், நம்­பிக்­கையை மட்­டும் தாம் இழக்­க­வில்லை என்­கி­றார் அதர்வா.

"ஒரு படம் வெளி­யா­க­வில்லை எனில் அதற்­குப் பல்­வேறு கார­ணங்­கள் இருக்­கும். ஒரு நடி­க­னாக எனது பங்­க­ளிப்பை தந்த பிறகு நான் செய்­வ­தற்கு ஒன்­று­மில்லை. அதே­ச­ம­யம் ஒரு படத்­தின் தரம் குறித்து கவ­லைப்­பட வேண்­டி­யது என் பொறுப்பு. நல்ல படைப்­பாக உரு­வாகி உள்ள பட்­சத்­தில் பட வெளி­யீட்­டில் ஏற்­படும் தாம­தம் குறித்து அதி­கம் கவ­லைப்­பட வேண்­டி­ய­தில்லை.

"உதா­ர­ண­மாக, 'பர­தேசி' படத்­தில் நடித்து முடிக்க மூன்று ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. அந்­தப் படம்­தான் எனக்­கான முக­வ­ரி­யாக உள்­ளது. 'குருதி ஆட்­டம்' படம் தாம­த­மாக வெளி­யீடு கண்­ட­தற்கு கொரோனா நெருக்­கடி உட்­பட மேலும் சில கார­ணங்­கள் உள்­ளன. எனி­னும் நல்ல படம் என்று பல­ரும் பாராட்­டும்­போது மன­தில் நம்­பிக்கை அதி­க­ரிக்­கிறது," என்­கி­றார் அதர்வா.

எனி­னும் பட வெளி­யீடு தாம­த­மா­கும்­போ­தும் ஒரு படம் வசூ­லில் சாதிக்­காத போதும் அது­கு­றித்து தாம் வருத்­தம் அடை­வ­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், தோல்­விப் படங்­க­ளைத் தேர்வு செய்­த­மைக்­காக தாம் வருந்­தி­ய­தில்லை என்­கி­றார்.

"வசூ­லில் ஏற்ற இறக்­கங்­களைப் பார்த்­து­விட்­டேன். சில சம­யங்­களில் நான் எடுத்­துள்ள முடிவு தவறோ என்று யோசித்­தி­ருக்­கி­றேன். வேறு மாதி­ரி­யான முடிவை எடுத்­தி­ருக்­க­லாம் என்­றும் தோன்­றும். அதற்கு சொந்­தப் படத் தயா­ரிப்பு நிறு­வ­னத்தை நல்ல உதா­ர­ண­மா­கக் குறிப்­பிட இய­லும்.

"படத் தயா­ரிப்பு என்­பது தந்­தி­ரங்­கள் நிறைந்த பாதை. இதில் வெகு விரை­வில் சிறப்­பாக நடை­போட இயலும் என்ற நம்­பிக்கை உள்­ளது.

"எனி­னும் தவறு நடந்­துள்­ளது என்­பதை ஏற்­றுக்­கொள்­கி­றேன்.

"கொரோனா நெருக்­கடி கார­ண­மாக பல நல்ல விஷ­யங்­கள் நடந்­துள்­ளன. திரை­யு­ல­கில் பல வேக­மான மாற்­றங்­கள் நிகழ்ந்­துள்­ளன. தயா­ரிப்­பா­ளர்­கள், இயக்­கு­நர்­கள் என அனை­வ­ரது அணு­கு­மு­றை­யும் மாறி­யுள்­ளது. முன்­பெல்­லாம் ஒரு­வரே அனைத்­தை­யும் செய்ய முயல்­வார். மற்­ற­வர்­க­ளுக்கு இடம்­கொ­டுக்க பெரும்­பா­லா­ன­வர்­கள் விரும்­பி­ய­தில்லை. ஆனால் இப்­போது கூட்டு முயற்­சி­யில் ஆர்­வம் காட்­டு­கின்­ற­னர்.

"வெவ்­வேறு மூலை­களில் இருப்­ப­வர்­கள் இணைந்து பணி­யாற்­று­வ­தற்­கான வாய்ப்­பு­கள் அதி­க­ரித்­துள்­ளன. நாம் முன்­வைக்­கும் ஆலோ­ச­னை­களைக் கேட்­டுக்­கொள்­கி­றார்­கள். மாற்­றுக் கருத்­து­க­ளுக்­கும் இடம் அளிக்­கப்­ப­டு­கிறது.

"என்­னைப் பொறுத்­த­வரை தமிழ்ச் சினி­மா­வின் ஆகச்­சி­றந்த காலக்­கட்­டத்­தில் இருப்­ப­தாக உணர்­கி­றேன். நல்ல கதை­யம்­ச­முள்ள படைப்­பு­கள் வெளி­வ­ரு­கின்­றன. இந்­தக் காலக்­கட்­டத்­தில் வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்க வேண்­டும் என ஆசை­யும் ஆர்­வ­மும் தலை­தூக்கி உள்­ளன.

"எனது படங்­க­ளைப் பார்ப்­ப­வர்­கள் தனித்­து­வ­மான அனு­ப­வத்­தைப் பெறவேண்­டும் என விரும்­பு­கி­றேன். அதை நோக்­கியே எனது திரைப்­ப­ய­ணம் திட்­ட­மி­டப்­ப­டு­கிறது," என்று சொல்­லும் அதர்வா, தற்­போது 'டிரிக்­கர்' படத்­தில் நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார். கார்த்­திக் நரேன் இயக்­கத்­தில் இவர் நடிக்­கும் நிறந்த மூன்று பட­மும் வேக­மாக வளர்ந்து வரு­கிறது.

அதர்வா நடிக்­கத் தொடங்கி 12 ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. இந்­நி­லை­யில், தன் தந்­தை­யும் நடி­க­ரு­மான முரளி கூறிய அறி­வு­ரையை தாம் மறக்­க­வில்லை என்­கி­றார்.

"எந்­த­வொரு தரு­ணத்­தி­லும் தமது நடிப்பை நான் பின்­பற்­றக்­கூ­டாது என்­றார் அப்பா.

"என் மன­துக்கு எது சரி­யெ­னப்­ப­டு­கி­றதோ அதை மட்டுமே எனது நடிப்­பில் வெளிப்­ப­டுத்த வேண்­டும் என்­றும் அது­தான் எனது தனித்­து­வத்தை நிலை­நி­றுத்­தும் என்­றும் அப்பா சொன்­னார். அவர் எதற்­காக இந்த அறி­வு­ரை­யைக் கூறி­னார் என்­பது எனக்­குத் தெரி­யாது. ஆனால் அது விலை­ம­திப்­பற்ற பெரிய சொத்து எனக் கரு­து­கி­றேன்.

"என்னை நடி­கர் முர­ளி­யின் மகன் என்று குறிப்­பி­டு­வதை நேசிக்­கி­றேன். ஆனால், அப்­பா­வுக்கு இதில் விருப்­பம் இல்லை. அதர்­வா­வின் தந்தை முரளி என்று எல்­லா­ரும் குறிப்­பிட வேண்­டும் என்­பதே அவ­ரது விருப்­ப­மாக இருந்­தது.

"அதைச் சாதிக்க நான் இன்­னும் நீண்ட தூரம் செல்ல வேண்­டி­யுள்­ளது. அதற்கு இடையே எனக்­கென கிடைத்­துள்ள ஓர் இடத்­தை­யும் ரசி­கர்­க­ளின் ஆத­ரவு, அங்­கீ­கா­ரத்­தை­யும் ரசித்து அனு­ப­வித்து வரு­கி­றேன்.

"என் தந்­தை­யின் கனவை நிறை­வேற்ற முடி­யும் என்ற நம்­பிக்­கை­யும் என் மன­தில் வலு­வாக பதிந்­துள்­ளது." என்­கி­றார் அதர்வா.

, :

  