'வெந்து தணிந்தது காடு' படப் பாடல் இன்று வெளியீடு

'வெந்து தணிந்தது காடு' படப் பாடல் இன்று வெளியீடு

1 mins read
8a498ae9-fff5-4fe8-be5f-07759df78cd4
'வெந்து தணிந்தது காடு படத்தில்' சிம்பு, சம்யுக்தா. -

கௌதம் மேனன் இயக்­கத்­தில் சிம்பு நடித்­துள்ள படம் 'வெந்து தணிந்­தது காடு'.

செப்­டம்­பர் 15ஆம் தேதி திரை­யரங்­கு­களில் வெளி­யா­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், இதில் இடம்­பெற்­றுள்ள இரண்­டா­வது பாடலை இன்று மாலை வெளி­யிட உள்­ள­னர்.

அண்­மை­யில் இப்­ப­டத்­தின் முதல் பாட­லான 'காலத்­துக்­கும் நீ வேணும்' பாடல் வெளி­யாகி ரசி­கர்­க­ளி­டையே நல்ல வர­வேற்பைப் பெற்­றது. இதை­ய­டுத்து இப்­ப­டத்­தின் அடுத்த பாட­லான 'மறக்­குமா நெஞ்­சம்' பாடல் இன்று இரவு சிங்கப்பூர் நேரப்படி 8.51 மணிக்கு வெளி­யா­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும், இந்­தப் பாடல் உரு­வாக்­கப்­பட்ட விதம் தொடர்­பான காணொ­ளிப்­ப­திவு ஒன்று முன்­கூட்­டியே வெளி­யி­டப்­பட்­டது. இதை சிம்பு ரசி­கர்­கள் சமூக ஊட­கங்­களில் பர­வ­லா­கப் பகிர்ந்து வரு­கின்­ற­னர்.

சிம்பு, கௌதம் மேனன் கூட்­டணி­யில் ஏற்­கெ­னவே வெளி­யான 'விண்­ணைத் தாண்டி வரு­வாயா', 'அச்­சம் என்­பது மட­மை­யடா' ஆகிய படங்­கள் விமர்­சன, வசூல் ரீதி­யில் வெற்றி பெற்­றுள்­ளன. அத­னால் மூன்­றா­வ­தாக உரு­வா­கும் படம் குறித்த எதிர்­பார்ப்பு அதிகரித்து வருகிறது.