'எங்கள் வியர்வையில் செயற்கை இல்லை'

'எங்கள் வியர்வையில் செயற்கை இல்லை'

2 mins read
77ea3190-176d-4d64-a9f5-e09251fb70bd
'கார்கி' படத்தில் ஒரு காட்சியில் சாய் பல்லவி, காளி வெங்கட். -

அண்­மைக் கால­மாக குணச்­சித்­திர கதா­பாத்­தி­ரங்­களில் தனி முத்­திரை பதித்து வரு­கி­றார் காளி வெங்­கட்.

'கார்கி' படத்­தில் கதா­நா­யகி சாய்­பல்­ல­வி­யின் வழக்­க­றி­ஞர் இந்தி­ரன் கலி­ய­பெ­ரு­மா­ளாக மிரட்­டல் நடிப்பை வழங்­கிய காளி, அடுத்து வசந்­த­பா­லன் இயக்­கும் 'அநீதி' படத்­தி­லும் முக்­கிய கதாபாத்திரத்தை ஏற்­றுள்­ளார்.

பின்­னணிக் குரல் கொடுக்­கும் கலை­ஞ­ரா­கத்­தான் தமது திரைப்­பயணத்தைத் தொடங்­கி­னார் காளி வெங்கட். இவ­ரது குரல் வித்­தியா­ச­மாக உள்­ளது என பல­ரும் கூறு­கின்­ற­னர்.

"அண்­மை­யில் 'கார்கி' படப்­பிடிப்­பில் நேர­டி­யா­கவே வச­னங்­களை ஒலிப்­ப­திவு செய்­த­னர். அப்­போது ஒலிப்­ப­தி­வா­ளர் ராகவ் என்னை திடீ­ரென அழைத்து, ஒரு மைக்கை சுட்­டிக்­காட்­டி­னார். 'மிக­வும் நுணுக்­க­மான சன்­ன­மான சத்­தங்­க­ளைக்கூட இந்த ஒலிபெ­ருக்கி பதிவு செய்­யும். ஆனால், காகத்தின் குரலை மட்டும் தவிர்க்க முடி­யாது. காக்கை தூரத்­தில் கரைந்தா­லும்­கூட அது பதி­வா­கி­வி­டும். உங்­கள் குர­லும் அப்­ப­டித்­தான், தவிர்க்­கவே முடி­யாது' என்­றார். இதை ஒரு பாராட்­டா­கவே கரு­து­கி­றேன்.

"இப்­போ­தும்­கூட பின்­ன­ணிக் கலை­ஞர்­கள் சங்­கத்­தில் உறுப்­பி­ன­ராக நீடிக்­கி­றேன். என்­னு­டைய ஏற்ற இறக்­க­மான குரல் நடி­கர் சிம்­புக்கும் மிகவும் பிடிக்­கும். 'ஈஸ்வரன்' படத்­தில் அவ­ரு­டன் இணைந்து நடித்­துள்­ளேன். படப்­பி­டிப்­பின்­போது, 'இவர் வாயா­லேயே நடிக்­கி­றார் பாருங்க' என்று உரி­மை­யோடு கலாட்டா செய்து, பாராட்­ட­வும் தவ­ற­மாட்­டார்," என்­கி­றார் காளி­வெங்கட்.

'கார்கி' படத்­துக்­காக அதி­கம் மெனக்­கெட்­ட­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், அதில் சாய் பல்­ல­வி­யின் நடிப்பு அபா­ர­மாக இருந்­தது எனப் பாராட்டு­கி­றார்.

"இந்­தப் படத்­தில் நடித்­த­தன் மூலம் எனது நடிப்பு மேலும் மெரு­கேறி இருப்­ப­தாக உணர்­கி­றேன். நடி­கர் கலை­ய­ர­சன் திடீ­ரென ஒரு­நாள் தொடர்புகொண்டு இந்­தப் படம் குறித்து விவ­ரம் சொன்­னார். இயக்­கு­நர் கௌதம் சந்­தித்துக் கதை சொல்­வார், பிடித்­தி­ருந்­தால் ஒப்புக் கொள்ளுங்கள் என்­றார்.

"நானும் கௌத­மும் நேரில் சந்­தித்­துப் பேசி­னோம். முதல் பாதி கதை­யைக் கேட்­ட­தும் பத­றிப்­போனேன். முழுக் கதை­யை­யும் கேட்டு முடித்­த­போது உடல் நடுங்­கி­யது. அடுத்த மூன்று நாள்­கள் இந்­தக் கதை­தான் மன­துக்­குள் சுழன்­ற­டித்­தது. வேறு எதை­யும் யோசிக்­கவே முடி­ய­வில்லை. எனது கதா­பாத்­தி­ரத்தை அழ­கா­கச் செதுக்கி இருந்­தார் கௌதம்.

"படப்­பி­டிப்­பின்­போது யாரும் எந்­த­வித வச­தி­யை­யும் எதிர்­பார்க்­க­வில்லை. வியர்­வை­யில் குளித்­தது­போல் இருந்ததாக சிறு­கதை, நாவல்­களில் குறிப்­பி­டு­வ­தைப் போல், ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வும் வெப்­ப­மான சூழ­லில் பணி­யாற்­றி­னோம்.

"நீதி­மன்றக் காட்­சி­க­ளுக்­காக பெரிய அரங்­கத்தை அமைத்­தி­ருந்­த­னர். நீதி­மன்­றத்­தைச் சுற்றிலும் கதவு, சன்­னல்­கள் வைத்து அடைத்­து­விட்­ட­தால் காற்று வர வாய்ப்­பின்­றிப் போனது. மேலும், குளிர்­சா­தன வச­திக்­கும் வழி­யில்லை. அதி­லி­ருந்து வரக்­கூ­டிய சத்­தம், வச­னங்­களை நேர­டி­யாக ஒலிப்­ப­திவு செய்­யும்­போது இடை­யூ­றாக இருக்­கும் என்று கூறி, அதைத் தவிர்த்­து­விட்­டார் இயக்­கு­நர்.

"திரை­யில் வியர்க்க விறுவிறுக்க நான் வச­னம் பேசு­வ­தைப் பார்த்­தி­ருப்­பீர்­கள். அது உண்­மை­யான வியர்வை. தண்­ணீரை 'ஸ்பிரே' செய்து நடிக்­க­வில்லை. ஒரு­முறை வேறு ஒரு படத்­தின் படப்­பி­டிப்­பில் இரவு முழு­வ­தும் தூங்­கா­மல் நடித்து முடித்த கையோடு 'கார்கி' படப்­பிடிப்­பில் பங்­கேற்­றேன். அடுத்த மூன்று நாள்­கள் நீதி­மன்­றக் காட்சி­களில் ஓய்­வின்றி நடித்­தேன். இப்படி சிர­மப்­பட்டு நடித்­தது வீண்­போ­க­வில்லை. ரசி­கர்­களும் விமர்­ச­கர்­களும் என் நடிப்­பைப் பாராட்­டும்­போது மன­நி­றை­வாக உள்­ளது," என்­கி­றார் காளி வெங்­கட்.