விஜய் நடிக்கும் 67வது படத்தில் நடிகர் அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளன.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகும் காரணத்தால், அந்தந்த மொழியில் பிரபலமாக உள்ள வில்லன் நடிகர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்ப் பதிப்பில் அர்ஜுனும் மலையாளத்தில் பிருத்விராஜும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்தியில் சஞ்சய் தத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இப்படத்தில் இரண்டு நாயகிகள் உள்ளனர்.
திரிஷாவை ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துவிட்டதாகப் படக்குழுவினர் கூறி வரும் நிலையில், மற்றொரு நாயகியாக சமந்தா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
விரைவில் அறிவிப்பு வெளி யாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

