ரஜினி மகள் ஐஸ்வர்யா அண்மைக்காலமாக ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.
தற்போது அவர் பல்வேறு கோவில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்த வண்ணம் உள்ளார். இந்நிலையில் திருவேற்காடு அம்மன் கோவிலுக்குச் சென்று வந்தது குறித்து தமது இன்ஸ்டகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.
"திருவேற்காடு அம்மன் தரிசனம். நான் அங்கே அமர்ந்து அம்மனைப் பார்க்கிறேன். அம்மன் என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்து ஒருபோதும் பயப்படாதே என்கிறாள். அவள் அருகில் எப்போதும் இருக்கவேண்டும் என என் கண்கள் பேசுகின்றன. அவள் என்னுள் தெளிவாக இருக்கிறாள்," என்று ஐஸ்வர்யா தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதைக் கண்ட ரசிகர்கள், கவலைப்பட வேண்டாம் என்று அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

