தமிழ்க் கதாநாயகர்களின் சம்பளம் குறைய வாய்ப்பு

தமிழ்க் கதாநாயகர்களின் சம்பளம் குறைய வாய்ப்பு

2 mins read
24c08427-e2f0-4401-bdf1-540a0f828eea
'வாரிசு' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் விஜய். -

தெலுங்குத் திரை­யு­ல­கில் கடந்த பதி­னைந்து நாள்­க­ளாக நடை­பெற்று வந்த வேலை நிறுத்­தப் போராட்­டம் நேற்­று­டன் முடி­வுக்கு வந்­துள்­ளது.

கடந்த சில ஆண்­டு­க­ளா­கவே தெலுங்குத் தயா­ரிப்­பா­ளர்­கள் பல­ரும் படத் தயா­ரிப்­பால் பெரும் நஷ்டங்­க­ளைச் சந்­தித்­துள்­ள­னர். அவர்­கள் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண வலி­யு­றுத்­தியே வேலை நிறுத்­தப் போராட்­டம் அறி­விக்­கப்­பட்­டது.

இத­னால் தமிழ்ப் படங்­க­ளுக்­கும் பாதிப்பு ஏற்­பட்­டது. கார­ணம், அதிக பொருள்­செ­ல­வில் தயா­ரா­கும் தமிழ்ப் படங்­க­ளின் படப்­பி­டிப்பு பெரும்­பா­லும் ஹைத­ரா­பாத், தெலுங்­கானா பகு­தி­க­ளில்­தான் நடை­பெறு­கின்­றன. அந்த வகை­யில், விஜய்­யின் 'வாரிசு', தனு­ஷின் 'வாத்தி', சிவ­கார்த்­தி­கே­ய­னின் 'ப்ரின்ஸ்', ஷங்­க­ரின் 'ஆர்.சி-15' ஆகிய பட வேலை­கள் ஹைத­ரா­பாத்­தில்­தான் நடந்து வந்­தன. வேலை நிறுத்­தப் போராட்­டம் முடி­வுக்கு வந்­தி­ருப்­பதை அடுத்து படப்­பி­டிப்­பு­கள் மீண்­டும் தொடங்க உள்­ளன.

"கதா­நா­ய­கர்­கள் பல கோடி ரூபாய் சம்­ப­ளம் பெறு­வதைத் தடுக்க முடி­ய­வில்லை. பட வேலை­கள் தொடங்­கிய உட­னேயே அவர்­கள் முழு சம்­ப­ளத்­தை­யும் பெற்­றுக்­கொள்­கின்­ற­னர். இத­னால் தயா­ரிப்­பா­ள­ரின் சுமை அதி­க­மா­கிறது. எனவே இனி படம் தொடங்­கி­ய­தும் குறிப்­பிட்ட தொகையை முன்­ப­ண­மா­கப் பெற்­றுக்­கொண்டு நடிக்க வேண்­டும். படம் முடி­வ­டைந்து வெளி­யீடு காணும்­போது மீதி தொகை­யைப் பெறவேண்­டும்.

"மேலும் படத்­தின் தயா­ரிப்­புச் செல­வு­க­ளைக் குறைப்­பது குறித்­தும் தயா­ரிப்­பா­ளர்­கள் சில கோரிக்கை முன்­வைத்­துள்­ள­னர். அவை­யும் கதா­நா­ய­கர்­க­ளால் ஏற்­கப்­பட்­டுள்­ளன," என்­கி­றார்­கள் திரை­யு­லக விவ­ரப் புள்­ளி­கள்.

அநே­க­மாக தெலுங்கு முன்­னணி நடி­கர்­கள் தங்­கள் ஊதி­யத்­தில் குறிப்­பிட்ட தொகையைக் குறைத்­துக் கொள்­வார்­கள் எனக் கூறப்­ப­டு­கிறது. அதன் தாக்­கம் கோலி­வுட்­டில் எதி­ரொ­லிக்­கும் பட்­சத்­தில் தமிழ்த் திரை­யு­ல­கி­லும் சில மாற்­றங்­கள் நிகழ வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. தமிழ்த் தயாரிப் பாளர்களும் இதுகுறித்து ஆலோ சனை நடத்தி வருகின்றனராம்.