ரஜினி திரையுலகில் அறிமுகமாகி 47 ஆண்டுகள் ஆகின்றன. இதை யடுத்து திரையுலகத்தினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யாவும் சௌந்தர்யாவும் தந்தைக்கு வாழ்த்து தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். அதில் தங்கள் தந்தை தெய்வக் குழந்தை என்று குறிப்பிட்டுள்ளனர்.
"அப்பா... நீங்கள் 47 ஆண்டுகால மேஜிக். நீங்கள் ஒரு தெய்வக் குழந்தை. வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு நீங்கள். உங்களை நேசிக்கிறோம் தலைவா," என்று இளைய மகள் சௌந்தர்யா குறிப்பிட்டுள்ளார்.
"47 ஆண்டுகள் ரஜினியிசம்... கடின உழைப்பு, அர்ப்பணிப்புக்கு கிடைத்த பரிசு இது. உங்கள் மகள் என்பதில் பெருமை கொள்கிறேன்," என்று மூத்த மகள் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். இருவரது வாழ்த்தும் ரஜினியை நெகிழ வைத்துள்ளதாம்.
இவ்விரு பதிவுகளையும் ரஜினி ரசிகர்கள் இணையத்தில் பரவலாகப் பகிர்ந்து வருகிறார்கள்.

