'அவமானங்கள் துரத்தின'

'அவமானங்கள் துரத்தின'

3 mins read
6bb7e85b-8894-44da-b3d5-48c75f5c8400
-

சிறு வயது முதல் பல்­வேறு சிர­மங்­க­ளை­யும் சவால்­க­ளை­யும் எதிர்­கொண்டு வளர்ந்­த­தா­கச் சொல்­கி­றார் ஐஸ்­வர்யா ராஜேஷ்.

அத­னால் சவா­லான கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்­கும்­போது தாம் உற்­சா­க­மாக உணர்­வ­தா­க­வும் அண்­மைய பேட்டி ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார்.

தமது திரை­யு­ல­கத் தோழி­க­ளு­டன் அண்­மை­யில் ஐரோப்­பா­வுக்­குச் சென்று விடு­மு­றை­யைக் கொண்­டாடி மகிழ்ந்த ஐஸ்­வர்யா, அங்கு எடுத்­துக்­கொண்ட புகைப்­ப­டங்­களைச் சமூக ஊட­கங்­களில் பதி­விட்­டுள்­ளார்.

இது­போன்ற விடு­மு­றை­கள் அவ­சி­ய­மா­னவை என்­றும் இவ்­வாறு பல இடங்­க­ளுக்­குச் சென்று வந்­தால்­தான் மன­தில் புத்­து­ணர்ச்­சி­யும் புதிய சவால்­களை எதிர்­கொள்­வ­தற்­கான ஆர்­வ­மும் அதி­க­ரிக்­கும் என்று அறி­வு­றுத்­து­கி­றார்.

"இது­போன்ற ஒரு வாழ்க்­கையை நான் கற்­பனை செய்­து­கூட பார்த்­த­தில்லை. சிறு வய­தில் கஷ்­டங்­க­ளைத் தவிர வேறு எது­வும் இருந்­த­தா­கத் தெரி­ய­வில்லை. குடும்ப கஷ்­டத்தை முழு­மை­யாக அனு­ப­வித்­தேன். அத­னால்­தான் இன்று வெற்றி, தோல்­வி­கள் என்­னைப் பாதிப்­ப­தில்லை. பணத்­தின் மீதான ஆசை­யும் இல்லை.

"என் பெய­ரில் இருக்­கும் செல்­வம் (ஐஸ்­வர்­யம்) வாழ்க்­கை­யில் இல்லை என்றே நினைக்­கி­றேன். ஆனால், இதற்­காக நான் கவ­லைப்­ப­டு­வ­தில்லை," என்­கி­றார் ஐஸ்­வர்யா.

தமக்கு எட்டு வய­தா­ன­போது தந்­தை­யின் அன்பை இழந்­து­விட்­ட­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், ஒரு சாலை விபத்­தில் உடன்­பி­றந்த அண்­ணன்­கள் இரு­வ­ரை­யும் பறி­கொ­டுத்­து­விட்­ட­தா­கக் கண்­க­லங்­கு­கி­றார்.

"வாழ்க்கை என்­பது நமக்கு அன்­றா­டம் புதுப்­புது பாடங்­க­ளைக் கற்­றுக்­கொ­டுத்த வண்­ணம் உள்ளது. அவற்­றைப் படித்­துத்­தான் ஆகவேண்­டும். இல்லை­யெ­னில் நாம் எதிர்­நோக்­கும் பிரச்­சி­னை­களைச் சமா­ளிக்க இய­லாது.

"திரைத்­து­றைக்கு வந்த புதி­தி­லும் சரி, அதற்கு முன்­பும் சரி, நிறைய போராட்­டங்­க­ளைச் சந்­தித்­துள்­ளேன். அடி­மேல் அடி என்­பார்­களே, அது எனக்கு நன்­றா­கப் பொருந்­தும். வெற்றி, தோல்­வி­கள் குறித்து நான் கவ­லைப்­ப­டா­மல் இருப்­ப­தற்கு இது­வும் ஒரு கார­ணம் என­லாம்," என்­கி­றார் ஐஸ்­வர்யா.

பெரிய கதா­நா­யகி என்ற பெயர் வேண்­டும், முதல் இடத்­தைப் பிடிக்கவேண்­டும் என்­றெல்­லாம் தமக்கு எப்­போ­துமே ஆசை இருந்­த­தில்லை என்று குறிப்­பி­டு­ப­வர், நல்ல நடிகை என்று பெய­ரெ­டுப்­பதே தமது லட்­சி­யம் என்­கி­றார்.

"எனக்கு இந்த இலக்கு மட்­டுமே போது­மா­னது. நல்ல நடிகை என்ற பாராட்டு கிடைத்த பிறகு அந்­தப் பெய­ரைத் தக்கவைத்­துக் கொள்­வ­தும் பெரிய சவா­லாக இருக்­கும். அதை­யும் உணர்ந்­து­தான் எனக்­கான கதா­பாத்­தி­ரங்­களை தேர்வு செய்­கி­றேன்.

"நான் நடித்த கதா­பாத்­தி­ரங்­கள் ரசி­கர்­கள் மன­தில் நிலைத்­தி­ருக்­கும் படி­யாக இருக்கவேண்­டும். இது­தான் என்­னு­டைய முக்­கி­ய­மான எதிர்­பார்ப்பு, ஆசை. சம்­ப­ளம், பாராட்டு ஆகி­யவை எல்­லாம் அதற்­குப் பிற­கு­தான்," என்­கி­றார் ஐஸ்­வர்யா.

திரை­யு­ல­கில் தமக்­கான மரி­யாதை கிடைப்­ப­தற்­காக கடு­மை­யாக உழைத்­த­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், நீண்ட போராட்­டத்­துக்­குப் பிறகே அதைச் சாதிக்க முடிந்­தது என்­கி­றார். தொடக்க காலத்­தில் படப்­பி­டிப்­பில் பங்­கேற்­கும்­போது அங்கு வைக்­கப்­பட்­டுள்ள குடி­நீ­ரைக் கூட குடிக்­க­மாட்­டா­ராம்.

"அனைத்­துக்­கும் பின்­ன­ணி­யில் ஒரு கார­ணம் உள்­ளது. நான் முன்­னணி கதா­நா­யகி அல்ல என்­பதால் எனக்கு ஓய்­வெ­டுக்க கேர­வேன் வசதி செய்து தரப்­ப­ட­வில்லை. அதற்­காக நான் கவ­லைப் பட்­ட­தும் இல்லை.

"எனி­னும் சுய­ம­ரி­யா­தையை இழந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தில் கவ­ன­மாக இருந்­தேன். முன்­னே­றிக் காட்ட வேண்­டும் என வைராக்­கி­யம் மன­தில் நிறைந்­தி­ருந்­தது. அவ­மா­னங்­கள் என்­னைத் துரத்­தி­ய­போது மனம் கலங்­க­வில்லை," என்­கி­றார் ஐஸ்­வர்யா.

'பண்­ணை­யா­ரும் பத்­மி­னி­யும்' படத்­தில் நடிக்­கும் போது­தான் இவ­ருக்கு கேர­வேன் வழங்­கப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கிறது. இன்று முன்­னணி நாய­கி­யாக இருப்பது குறித்து மகிழ்ச்சி அடை­வ­தா­கக் கூறு­கிறார். தற்­போது திரைப்்­ப­டங்­கள் மட்­டு­மல்­லா­மல் இணை­யத் தொடர்­க­ளி­லும் கவ­னம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா, நல்ல கதா­பாத்­தி­ரங்­கள் அமைந்­தால் எப்­ப­டி­யா­வது கால்­ஷீட் பிரச்­சி­னை­க­ளைச் சமா­ளித்து அதை ஏற்று நடிக்­கி­றார்.

, :   

ஐஸ்வர்யா ராஜேஷ்