வீட்டுப் பெண்களின் உதவியால் சாதிக்கிறோம்

வீட்டுப் பெண்களின் உதவியால் சாதிக்கிறோம்

2 mins read
bb832203-d561-4176-8a66-cbb93123fa87
பெற்றோருடன் சூர்யா, கார்த்தி தம்பதியர். -

"முழு­மை­யான வெற்றி என்­பது அடிக்­கடி கிடைத்­து­வி­டாது என்­கிறார் நடி­கர் கார்த்தி.

எனவே வாய்ப்பு கிடைக்­கும்­போது ஒரு வெற்­றியை இயன்ற அள­வுக்கு பெரி­தா­கக் கொண்­டாடி­விட வேண்­டும் என 'விரு­மன்' படத்­தின் வெற்­றி­யைக் கொண்­டாடும் நிகழ்­வில் அவர் பேசி­னார்.

"இந்த வெற்றி ஒரு பெரிய குடும்­பத்­தின் வெற்­றி. இயக்­கு­நர் முத்­தையா எப்­போ­துமே கண்­ணீரு­டன்­தான் கதை சொல்­வார். விட்டுக் கொடுத்­துப் போவ­தில்தான் குடும்­பத்­தின் அழகே இருக்­கிறது.

"கூட்டுக்குடும்­ப­மாக வாழ மிகப்­பெ­ரிய சகிப்­புத்­தன்மை தேவை. நம்­மை­விட மற்­ற­வர்­கள் முக்­கி­யம் எனக் கருத வேண்­டும். இந்­தப்­படம் கிரா­மத்­தில் ஓடும், எனினும் நக­ரத்­தில் சந்­தே­கம்­தான் என்­றார்­கள். ஆனால், நக­ரத்­தில் நான் கேட்டே என் படத்தை திரை­ய­ரங்­கில் காண நுழை­வுச்­சீட்டு கிடைக்­க­வில்லை. குடும்­பங்­க­ளின் தியா­கத்­தால்­தான் நாங்­கள் வீட்டை விட்டு வெளி­யில் வந்து வேலை செய்ய முடி­கிறது," என்­றார் கார்த்தி.

இதை­ய­டுத்து பேசிய நடி­கர் சூர்யா, ஒரு பெண் வெற்­றி­பெற பத்து மடங்கு போராட வேண்­டி­உள்­ளது என்­றார்.

குடும்­பத்­துக்­காக ஒரு பெண் வீட்­டில் இருந்­த­படி உழைப்­பது மிகப்­பெ­ரிய தியா­கம் என்று அவர் நெகிழ்ச்­சி­யா­கக் குறிப்­பிட்­டார்.

"எனக்­கும் கார்த்­திக்­கும் பின்­னால் இருக்­கும் மிகப்­பெ­ரிய பலம் எங்­கள் வீட்­டுப்பெண்­கள்தான். அவர்­க­ளின் தியா­கம் மிகப்­பெரியது.

"ஓர் ஆண்­ம­கன் இங்கே வெற்றி பெறு­வது எளிது. ஆனால், ஒரு பெண் வெற்­றி­பெற பத்து மடங்கு போராட வேண்­டியி­ருக்­கிறது. வீட்டில் இ­ருக்­கும் ஆண் மகனை முன்­னி­றுத்தி பின்­னால் நிற்­கி­றார்­கள் பெண்­கள்.

"என் தங்கை சொன்­ன­து­தான் எனக்கு இப்­போது நினை­வுக்கு வரு­கிறது. 'எங்­க­ளுக்கு சொர்க்­கம் எது­வென்­றால், நாங்­கள் சாப்­பிட்ட தட்டை இன்­னொ­ரு­வர் கழு­வு­வ­து­தான்' என்று அவர் குறிப்­பிட்­ட­போது பல விஷ­யங்­கள் எனக்­குப் புரிந்­துள்­ளன.

"நம் வீட்­டுப் பெண்­களை மட்­டு ­மல்­லாம், நம்­மைச் சுற்­றி­யுள்ள அனைத்­துப் பெண்­க­ளை­யும் ஒவ்­வொரு முறை­யும் முன்­னி­றுத்தி அவர்­க­ளைப் புரிந்­து­கொள்ள வேண்டும்," என்­றார் சூர்யா.

இயக்­கு­நர் முத்­தையா இயக்­கத்­தில் நடி­கர் கார்த்தி நடிப்­பில் வெளி­யான படம் 'விரு­மன்'. இப்­ப­டத்தை நடி­கர் சூர்யா தனது 2டி நிறு­வ­னம் மூலம் தயா­ரித்­தி­ருந்­தார். அதிதி சங்­கர் நாய­கி­யாக அறி­மு­க­மாக இந்­தப் படம் வெளி­யீடு கண்ட ஐந்து நாள்­களில் முப்­பது கோடி ரூபாய் வசூல் கண்­டுள்­ளது.