‘யாரும் தொடாத தலைப்பு’

ஒரு திரைப்­ப­டத்­தில் ஒன்­றி­ரண்டு 'ஃபிளாஷ் பேக்' காட்­சி­கள் இடம்­பெ­று­வது இயல்பு. ஆனால் நாற்­பது 'ஃபிளாஷ் பேக்' சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றால் எப்­படி இருக்­கும் என்று யோசித்­துப் பாருங்­கள். 'கொலை' படத்­தின் கதையை இவ்­வாறு வித்­தியா­ச­மாக அமைத்­துள்­ளார் இயக்­கு­நர் பாலாஜி குமார்.

நூறு ஆண்­டு­க­ளுக்கு முன்பு நிகழ்ந்த உண்மைச் சம்­ப­வத்­தின் தழு­வல்­தான் 'கொலை' திரைப்­ப­டம் என்­றும் தாம் இது­வரை படித்து முடித்­துள்ள சுமார் முந்­நூறு புத்­த­கங்­கள் ஏற்­ப­டுத்­திய தாக்­க­மும் இந்தக் கதை­யில் இருக்­கும் என்­றும் சொல்­கி­றார்.

"இந்­தப் படத்­தின் நாய­க­னாக விஜய் ஆண்டனி­யின் பங்­க­ளிப்பை எவ்­வ­ளவு பாராட்­டி­னா­லும் தகும். இந்­தக் கதைக்கு அவர் மட்­டுமே பொருத்­த­மாக இருப்­பார் என்று சொல்லமாட்­டேன். ஆனால் அவர் சரி­யான தேர்­வாக இருப்­பார் என்­ப­தில் சந்­தே­கமே இல்லை.

"படப்­பி­டிப்பு முழு­மை­யாக முடிந்த பின்­னர் ஒரு­நாள் அவ­ரு­டன் மனம்விட்­டுப் பேசிக்கொண்­டி­ருந்­தேன். அப்­போது, 'இந்­தப் படத்­தில்­தான் நான் நடித்த மாதிரி தெரி­கிறது. ஒரு­வித மன நிறைவு உள்­ளது' என்­றார்.

"படத்­தின் கதையை அவ­ரி­டம் விவ­ரிக்­கச் சென்­ற­போது, இரு­பது நிமி­டங்­க­ளுக்­குள் முடிந்­து­வி­டுமா என்று கேட்­டார். அது கடி­னம் என்­றா­லும் முயற்சி செய்­வ­தா­கக் கூறி, கதை­யைச் சொல்ல ஆரம்­பித்­தேன்.

"இடை­வேளை பகுதி வரும்­வரை பொறு­மையாகக் கேட்­ட­வர், உடனே தனது கைபேசி மூலம் தயா­ரிப்­பா­ளரைத் தொடர்­பு­கொண்டு நடிக்க சம்மதம் என்று தெரி­வித்­தார். பிறகு கதைப்­படி யார் கொலை­கா­ரன் என்­பதை உடனே தெரிந்­து­கொள்ள விரும்பு­வதா­கக் கூறி­னார்.

"அது மட்­டு­மல்ல, கதை­யில் மூழ்­கிப்போன­வராக பல்­வேறு ஆலோ­ச­னை­க­ளை­யும் வழங்­கி­னார். அவ­ருக்­காக கதை­யில் சில மாற்­றங்­க­ளைச் செய்ய வேண்­டி­யி­ருந்­தது. அதை­யும்­கூட அவர் வற்­பு­றுத்­த­வில்லை. நானாக விரும்­பிச் செய்­தேன்," என்­கிறார் பாலாஜி குமார்.

1920, 1930களில் வெளி­வந்த புத்­த­கங்­க­ளைத் தேடிப்­பி­டித்து படித்­தா­ராம். நூறு ஆண்­டு­க­ளுக்கு முந்­தைய கதை­யைக் கையாள்­வது கடி­ன­மாக இருந்­தது என்­கி­றார்.

"ராணு­வம் சார்ந்த கதை­களை விரும்­பிப் படிப்­பேன். அது­போன்ற கதை­க­ளைப் பட­மாக்­கு­வ­தும் பிடிக்­கும். இது­கு­றித்­தெல்­லாம் விஜய் ஆண்டனியுடன் நிறைய கலந்­து­ரை­யாட முடிந்­தது.

"இந்த 'கொலை' படத்­தின் கதைக்­கான திரைக்­க­தையை நாற்­பத்து ஐந்து முறை எழுத முயன்று, ஒரு­வ­ழி­யாக முடித்­தேன். நாற்­பது 'ஃபிளாஷ் பேக்' காட்­சி­களை ரசி­கர்­க­ளுக்­குப் புரியும் வகை­யில் எப்­ப­டிப் பட­மாக்­கு­வது என்ற தயக்­க­மும் பய­மும் தொடக்­கத்­தில் இருந்தது.

"படம் தேவை­யின்றி நீள­மா­கி­வி­டக்­கூ­டாது என்­ப­தில் கவ­னம் செலுத்­தி­னேன். மேலும் குறைந்­த­பட்­சம் மூன்று பாடல்­க­ளுக்­கா­வது இட­ம­ளிக்க வேண்­டி­யி­ருக்­கும். அதற்கு 12 நிமி­டங்­கள் தேவை. மற்ற காட்­சி­க­ளை­யும் உள்­ள­டக்­கி­னால் மூன்று மணி நேரம் கூட தேவைப்­படும் என்ற நிலை­யில் திட்­ட­மிட்டு உழைத்­தோம். இறு­தி­யில் இரண்­டே­கால் மணி நேரப் பட­மாக உரு­வாகி உள்­ளது 'கொலை' படம்," என்­கி­றார் பாலாஜி குமார்.

படத்­த­லைப்­புக்­கான கார­ணம்?

"நாம் எல்­லா­ருமே மிக சாதா­ர­ண­மாக 'கொலை' வார்த்­தை­யைப் பயன்­ப­டுத்­து­கி­றோம். ஆனால், நூறாண்­டு­கால தமிழ் சினிமா வர­லாற்­றில் ஒரு படம்­கூட 'கொலை' என்ற தலைப்­பில் வெளி­வந்­த­தில்லை. இது யாரும் தொடாத தலைப்பு. எப்­படி இந்த வார்த்­தையை யாரும் கவ­னிக்­கா­மல் விட்டனர் என்று எனக்கு ஆச்­ச­ரி­ய­மாக இருந்­தது.

"இது­போன்ற சின்­னச்­சின்ன விஷ­யங்­கள்­தான் ஒரு படைப்­புக்கு ஒரு­வித முழு­மை­யைக் கொடுக்­கும். ஆனால், அந்­தச் சின்ன விஷ­யங்­களைச் செய்து முடிப்­பது, சாதிப்­பது அவ்­வ­ளவு சாதா­ர­ணம் கிடை­யாது. அப்­ப­டிச் சின்­னச்­சின்ன விஷ­யங்­கள் மூலம் இந்­தப் படத்­துக்கு சுவா­ர­சி­யம் சேர்த்­துள்­ளோம்.

"என்­னைப் பொறுத்­த­வரை நாம் விரும்­பும் விதத்­தில் படம் எடுக்க வேண்­டும். அது மக்கள் மன­தைப் புரிந்­து­கொண்டு எடுக்­கப்­பட்ட பட­மா­க­வும் அமை­யும்­போது பெரிய வெற்­றி­யைப் பெறும்.

"ஒரு நல்ல படைப் பைத் தர வேண்­டும் என்ற எண்­ணம் மட்­டுமே மனம் முழு­வ­தும் நிறைந்­தி­ருக்­கும். ஒரு கதையை ஐம்பது முறை சுருக்­கி­யும் நீட்­டி­யும் எழு­து­வேன். அப்­போ­து­தான் மன­நி­றைவு ஏற்­படும்.

"விஜய் ஆண்­டனி இயக்­கு­ந­ரின் மன­தைப் புரிந்­து­கொண்டு செயல்படும் நாய­கன். அத­னால் அவ­ரு­டன் பணி­பு­ரி­வது சிறந்த அனு­ப­வ­மாக இருக்­கும்," என்­கிறார் பாலாஜி குமார்.

இதற்­கி­டையே, இந்த ஆண்டு இறு­திக்­குள் விஜய் ஆண்­டனி நடிப்­பில் மேலும் இரண்டு படங்­கள் வெளி­யாக வாய்ப்­பு உள்­ள­தாக அவ­ரது தரப்பு தெரி­வித்­துள்­ளது.

தயா­ரிப்­பா­ளர்­களின் சிர­மத்தை உணர்ந்து அவர் தனது சம்­ப­ளத்­தைக் குறைத்­துக்­கொள்­வ­தாக அறி­வித்­தி­ருந்­தார். அந்த அறி­விப்­பில் இது­வரை எந்த மாற்­ற­மும் செய்­யப்­ப­ட­வில்லை.

, :   

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!