ரஞ்சித்: மனித மாண்பை மீட்டெடுக்கும் முயற்சி

பா.ரஞ்­சித் இயக்­கத்­தில் உரு­வாகி வரு­கிறது 'நட்­சத்­தி­ரம் நகர்­கிறது' படம். இளை­யர்­களை மையப்­ப­டுத்தி இப்­ப­டத்தை உரு­வாக்­கு­வ­தா­கச் சொல்­கி­றார்.

காளி­தாஸ் ஜெய­ராம், துஷாரா, கலை­ய­ர­சன், வினுஷா, ஹரி, சார்­லஸ் வினோத் உள்­ளிட்ட பலர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ள­னர். அனை­வ­ருக்­குமே உரிய முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­பட்­டுள்­ள­தாம்.

"இது காதல் படம் அல்ல. காதல் பற்­றிய படம். ஆணும் பெண்­ணும் சந்­திக்­கும்­போது அந்த உறவு காத­லா­கத் தொடங்­கு­கிறது. அந்த உறவு குடும்­பத்­திற்­குத் தெரி­யும்­போது சமூ­கத்­தின் பிரச்­சி­னை­யாக மாறு­கிறது.

"இங்கே காத­லுக்கு ஒரு மதிப்­பீடு வைத்­துள்­ள­னர். காதல் வர்க்­கத்­தை­யும் சாதி­யை­யும் பின்­னிப் பிணைந்­த­தாக அந்த மதிப்­பீடு இருக்­கிறது. காதல் தனிப்­பட்ட விஷ­ய­மாக இருக்­கும்­போது எந்­தப் பிரச்­சி­னை­யும் இல்லை. இப்­போது காதலை அர­சி­ய­லாக மாற்றி உள்­ள­னர். அதைப்­பற்றி விவா­திக்­கும் படம்­தான் இது.

"இதில் வெறும் ஆண், பெண் காதல்­கள் மட்­டு­மல்­லா­மல், ஒரு பாலி­னக் காதல் குறித்­தும் பேசி­யுள்­ளோம். திரு­நங்­கை­யின் காத­லும் இருக்­கிறது.

"புது­வை­யில் நாட­கக் குழு ஒன்று காதல் பற்றி ஒரு நாட­கம் தயா­ரிக்க முடிவு செய்­கிறது. அந்த நாட­கத்­தைப் பற்­றிய விவா­தம் எவ்­வாறு நடக்­கிறது, அந்த நாட­கம் அரங்­கே­றி­யதா, இடைப்­பட்­ட காலத்­தில் அந்த நாடா­கக் குழு­வில் ஏற்­ப­டக்­கூ­டிய உணர்­வு­பூர்­வ­மான பிரச்­சி­னை­கள், அக்­கு­ழு­வில் இருப்­ப­வர்­க­ளின் உணர்­வு­கள், காதல் என பல­வற்றை விவா­திக்க முயற்சி செய்­துள்­ளேன். ஒரு காத­லைக் குடும்­ப­மும் சமூ­க­மும் எப்­ப­டிப் பார்க்­கின்­றன என்­ப­து­தான் மையக்­கரு," என்­கி­றார் பா.ரஞ்­சித்.

தமது திரைப்­ப­ய­ணத்­தில் இது­வரை தாம் எழுதி எடுத்த படங்­களில் இருந்து 'நட்­சத்­தி­ரம் நகர்­கிறது' படம் மாறு­பட்­ட­தாக இருக்­கும் என்று குறிப்­பி­டு­ப­வர், தமது சினிமா வாழ்க்­கை­யில் இது முக்கிய படைப்­பாக இருக்­கும் என்கிறார்.

"என் மன­தில் ஏற்­ப­டக்­கூ­டிய உணர்­வு­தான் படம் பார்ப்­ப­வர்­களுக்­கும் ஏற்­படும். நவீன சினி­மா­வின் தாக்­கத்­தில் இந்­தக் கதையை எழுதி இருக்­கி­றேன். நான் எதிர்­பார்த்­தது போலவே நல்ல படைப்­பாக வந்­தி­ருக்­கிறது.

"கதா­நா­ய­க­னுக்கு இரண்டு சண்­டைக்­காட்­சி­கள் இருக்க வேண்­டும், சில பாடல்­கள் வேண்­டும் என்­கிற நிர்ப்­பந்­தங்­க­ளுக்கு இந்­தப் படத்­தில் இடம்­கொ­டுக்­க­வில்லை.

"எனது படங்­கள் அனைத்­தை­யுமே எளிய மனி­தர்­க­ளின் மனித மாண்பை மீட்­டெ­டுப்­ப­தற்­கான முயற்சி­யா­கவே கரு­து­கி­றேன். இன்­றைய மின்­னி­லக்க உல­கில் இளை­யர்­க­ளின் மனப்­போக்கு எப்­ப­டிப்­பட்­ட­தாக இருக்­கிறது என்­ப­தைப் புரிந்­து­கொள்­ள­வும் ரசி­கர்­கள் இந்­தப் படத்­தைப் பார்க்­க­லாம்.

"இந்­தப் படத்­துக்கு சந்­தோஷ் நாரா­ய­ணன் இசை­ய­மைக்­க­வில்லை. அவ­ரு­டன் ஐந்து படங்­களில் இணைந்து பணி­யாற்றி உள்­ளேன். எனவே வேறு ஒரு­வ­ரு­டன் இணைய வேண்­டும் எனத் தோன்­றி­யது. அத­னால்­தான் டென்மா என்­ப­வ­ரு­டன் இணைந்­துள்­ளேன். அவரும் என் எதிர்பார்ப்புக்கேற்ப சிறப்பாக இசையமைத்துள்ளார்," என்­கி­றார் பா.ரஞ்­சித்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!