நடிகை நமீதா இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாகி உள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அவர், பின்னர் திரையுலகில் இருந்து ஒதுங்கினார்.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதமே நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாகவும் பெயர் சூட்டு விழாவில் குழந்தை பிறந்த விவரத்தை அறிவிக்கலாம் என்றும் அவர் முடிவு செய்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தன் கணவருடன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார் நமீதா. அவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

