ஐம்பது படங்களில் நடித்து அசத்தும் யோகி

ஐம்பது படங்களில் நடித்து அசத்தும் யோகி

1 mins read

இந்த ஆண்­டில் மட்­டும் ஐம்­பது படங்­களில் ஒப்­பந்­தாகி உள்­ளார் யோகி­பாபு. அவற்­றுள் 11 படங்­கள் வெளி­யாகி உள்­ளன. 39 படங்­கள் தயாரிப்பில் உள்­ளன.

தற்­போது யோகி­பாபு கைவ­சம் 'சைத்­தான் கா பச்சா', 'சது­ரங்க வேட்டை-2', 'அடங்­காதே', 'ஜக­ஜால கில்­லாடி', 'அந்­த­கன்', 'பிஸ்தா', 'காவி ஆவி நடு­வுல தேவி', 'ஹரா', 'பூச்சாண்டி', 'சலூன்', 'அய­லான்', 'காஃபி வித் காதல்', 'தீயோ­ருக்கு அஞ்­சேல்', 'டக்­கர்', 'சூரப்­புலி', 'தமி­ழ­ர­சன்' உள்­ளிட்ட படங்­கள் உள்­ளன. இவை தவிர பெய­ரி­டப்­ப­டாத சில படங்­களும் உள்­ளன.

இவ­ருக்கு அடுத்தபடி­யாக அதிக படங்­களில் நடித்துவரும் நடி­கர் என்­றால் அது விஜய் சேது­பதிதான். தற்­போது சேது­பதி கைவ­ச­மும் பத்து படங்­கள் உள்­ளன. ஜிவி பிர­காஷ், ராகவா லாரன்ஸ், சசி­கு­மார் ஆகியோர் அரை டஜன் படங்­களில் ஒப்­பந்­த­மாகி, வரி­சை­யாக நடித்து வரு­கின்­ற­னர்.

யோகி பாபு நாய­க­னா­க­வும் நடித்து வரு­வ­தால், அதிக படங்­களில் நடிக்­கும் நாய­கர்­கள் பட்­டி­ய­லில் இவ­ருக்­குத்­தான் முத­லி­டம்.