தமிழ் குறும்படம் ஒன்று இருபத்து ஐந்து திரைப்பட விழாக்களில் பங்கேற்று 59 விருதுகளை வென்றுள்ளது.
கேத்தி, ராப்பி பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள 'சஷ்தி' என்ற இந்த குறும்படத்தின் கதையை எழுதி இயக்கி உள்ளார் ஜூட் பீட்டர் டேமியான்.
இதில் செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 15ஆம் தேதி ஐ ட்யூன்ஸ், கூகல் பிளே ஆகியவற்றில் வெளியாகி உள்ளது. 'சஷ்தி' குறும்படம் நேரடி ஒலிப்பதிவு முறையில் உருவாகியுள்ளது. தாய்க்கும் மகனுக்குமான உறவை மையப்படுத்தி கதைக்களத்தை அமைத்துள்ளார் இயக்குநர்.
இந்நிலையில் தோக்கியோ முதல் டொராண்டோ வரை, 25 திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் 59 விருதுகளை வென்றுள்ளது 'சஷ்தி'.

